sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தீவிரவாதத்தை வேருடன் அழிப்போம் முன்னாள் ராணுவத்தினர் பேட்டி

/

தீவிரவாதத்தை வேருடன் அழிப்போம் முன்னாள் ராணுவத்தினர் பேட்டி

தீவிரவாதத்தை வேருடன் அழிப்போம் முன்னாள் ராணுவத்தினர் பேட்டி

தீவிரவாதத்தை வேருடன் அழிப்போம் முன்னாள் ராணுவத்தினர் பேட்டி

2


ADDED : ஏப் 25, 2025 11:44 PM

Google News

ADDED : ஏப் 25, 2025 11:44 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராணுவ பலம் நம் வசம் உண்டு

ராஜசேகர், கார்கில் போரில் பங்கேற்ற முன்னாள் ராணுவ வீரர்;

தலைவர், திருப்பூர் மாவட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கம்:தீவிரவாதத்தை பாக்., தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. இந்தியா சார்பில் எத்தனை முறை எச்சரித்து விட்டாலும், மீண்டும், மீண்டும் தீவிரவாத ஆதரவு போக்கை அந்நாடு கைவிடுவதாக தெரியவில்லை. இதற்கு ஒரே வழி, எவ்வித யோசனையும் செய்யாமல், பாக்., மீது போர் தொடுத்து, அந்நாட்டை இந்தியா, தன் வசமாக்க வேண்டும். ஏற்கனவே, சமூக, பொருளாதாரத்தில், பாக்., பாதிப்படைந்து இருக்கிறது. எனவே, பாக்., உடன் போர் தொடுப்பதால், நம் நாட்டுக்கு பொருளாதார பாதிப்பு உள்ளிட்டவை எதுவும் வராது. அதற்கான, ராணுவ பலத்தை இந்தியா தன் வசம் வைத்துள்ளது.

மத்திய அரசு நடவடிக்கைக்கு பாராட்டு

முரளிதரன், திருப்பூர் மாவட்ட தலைவர், முன்னாள் படை வீரர் நலச்சங்கம்:

காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல், மிக கொடுமையான விஷயம். எதிரியாக இருந்தாலும், அவர்களது கையில் ஆயுதத்தை வழங்கி போரிடுவது தான் வீரம். ஆனால், நிராயுதபாணிகளாக, சுற்றுலா பயணிகளாக கூடியிருந்த அப்பாவிகளை கொன்று குவித்தது, மாபாதக செயல்; கோழைத்தனம். தொடர்ந்து, தீவிரவாதிகளின் முகாம்களை கூண்டோடு அழிக்க வேண்டும். அவர்களது பதுங்கு இடங்களை கண்டறிந்து அழிக்க வேண்டும். இந்தியா வளர்ந்து வரும் நாடு என்ற வகையில், போர் தொடுப்பது என்பது ஏற்புடையதல்ல. போர் தொடுத்தால் பொருளாதார பாதிப்பு ஏற்படும். அப்பாவிகள் பாதிப்பர்; போர் என்பது, தீர்வல்ல; இதற்கு உக்ரைன் உள்ளிட்ட போர்களை உதாரணமாக சொல்லலாம். எனவே, பிரச்னைக்கு காரணமான பயங்கரவாதத்தை வேருடன் அழிப்பது தான் சிறந்தது. தற்போதைய நிலையில், சிந்து நதி நீர் நிறுத்தம் உள்ளிட்ட பாகிஸ்தானுக்கு எதிரான நிர்வாக ரீதியான மத்திய அரசின் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது.

மக்கள் மன நிலை மாற வேண்டும்

முருகேசன், ஓய்வு பெற்ற தரைப்படை வீரர்:

பயங்கரவாதிகள் எப்போதும், நேருக்கு நேர் மோதுவதில்லை. ஒளிந்திருந்தும், மறைந்திருந்தும் தான் தாக்குவர். அந்த அடிப்படையில் தான், பகல்காமில், சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்; இது, வன்மையாக கண்டிக்கத்தக்கது. மத்திய அரசு, காஷ்மீரில், 370வது சட்டப்பிரிவை, கடந்த ஐந்தாண்டுக்கு முன் நீக்கியது. அதன்பிறகு, காஷ்மீர், அமைதி பூங்காவாகவே இருந்தது. அதிகளவில் சுற்றுலா பயணிகள் செல்ல துவங்கினர்; அங்குள்ள மக்களுக்கும் சுற்றுலா தொழில் தான் பிரதானம். தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தான் மீது, மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கை பாராட்டுக்குரியது. ராணுவத்துக்கு தேவையான ஆயுதம் உள்ளிட்ட அனைத்து கட்டமைப்புகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. காஷ்மீரில் உள்ள 70 சதவீத மக்கள் தீவிரவாதத்துக்கு எதிரான மனநிலைக்கு வந்துள்ளனர். சொற்ப அளவிலான மக்கள், தீவிரவாதத்துக்கு ஆதரவாக உள்ளனர்; அவர்களது மனநிலையை மாற்ற வேண்டும்.

வடு காய்வதற்குள் நடவடிக்கை தேவை

மகேஷ்வரன், ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி:

காஷ்மீரில் நடக்கும் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக, அதன் வடு காய்வதற்குள், மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில், எந்தவொரு விஷயத்தையும் உணர்ச்சி வசப்பட்டு கூற முடியாது. இந்திய ராணுவம் மிக வலுவாக இருந்தாலும், இந்த விவகாரத்தை அரசு மிக கவனமுடன் எதிர்கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை. அதற்காக தான் துறை அமைச்சகம் உள்ளிட்ட ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகின்றனர். பயங்கரவாதிகள் தாக்குதலில், கணவரை பலி கொடுத்த பெண் கூறிய படி, 'இந்தியன் என்ற அடிப்படையில், காஷ்மீர் முதல், கன்னயாகுமரி வரை நாங்கள் தலை நிமிர்ந்து, சுதந்திரமாக நடக்க வேண்டும். ஆனால், தலைகுனிந்து பயந்து நடக்க வேண்டியுள்ளது. பயங்கரவாதிகள் தலைநிமிர்ந்து, சுதந்திரமாக நடக்கின்றனர்; இது தவிர்க்கப்பட வேண்டும்' என சுட்டிக்காட்டியுள்ளார். இதே கருத்தை, நானும் முன்வைக்கிறேன்.






      Dinamalar
      Follow us