/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'விடுபட்ட அறிவிப்புகள் அரசிடம் வலியுறுத்துவோம்'
/
'விடுபட்ட அறிவிப்புகள் அரசிடம் வலியுறுத்துவோம்'
ADDED : பிப் 02, 2025 01:11 AM

மத்திய பட்ஜெட் குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சுப்பிரமணியன் கூறியதாவது:
மத்திய பட்ஜெட்டில், வருமான வரி உச்சவரம்பு, தொழில் முனைவோர் ஊக்குவிப்பு திட்டம், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான வரம்பு வரையறை மாற்றம்; பிணையில்லா கடன் உச்சவரம்பு உயர்வு என, பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
பின்னலாடை தொழிலில், 80 சதவீதம் பருத்தி, 20 சதவீதம் செயற்கை நுாலிழை ஆடைகள் என்று இருக்கிறது. இதை, 70:30 என்ற விகிதத்தில் உயர்த்த திட்டமிட்டுள்ளோம்.
பருத்தி சாகுபடி மேம்பாட்டு திட்டத்தால், தரமான பருத்தி ஆடை உற்பத்தியும் அதிகரிக்கும். திருப்பூர் ஏற்றுமதியாளர்களின், வட்டி சமன்படுத்தும் திட்ட நீட்டிப்பு, வட்டி மானியம், 5 சதவீதமாக உயர்த்துவது, வங்கதேச ஆடை இறக்குமதிக்கான கட்டுப்பாடு, பிரத்யேக ஏற்றுமதி வர்த்தக குறியீடு மற்றும் அதற்கான சிறப்பு ஊக்கத்தொகை திட்டம் போன்றவை இடம்பெறவில்லை.
இதுகுறித்து மத்திய அரசிடம் மீண்டும் கோரிக்கை விடுத்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்படும். 'இந்தியா போஸ்ட்' என்ற பெயரில், உள்நாட்டு சரக்கு போக்குவரத்து சேவைஅளிப்பது, தொழில்துறைக்கு பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.
பொதுச்செயலாளர் திருக்குமரன், இணை செயலாளர் குமார் துரைசாமி, ஆலோசனை குழு உறுப்பினர் சுனில்குமார், பட்ஜெட் குறித்து பேசினர்.