தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ குப்பையில் இருந்து உருவாகும் செல்வம்

 குப்பையில் இருந்து உருவாகும் செல்வம்

 குப்பையில் இருந்து உருவாகும் செல்வம்


ADDED : நவ 29, 2025 08:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2025 08:05 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒவ்வொரு பகுதியில் உள்ள வளம் தான், அப்பகுதியின் வளர்ச்சிக்கு உதவும். அந்த அடிப்படையில், உள்ளூரில் உள்ள வளங்களை பாதுகாப்பது தான், அப்பகுதியின் வளர்ச்சிக்கு பேருதவியாக இருக்கும்.

இயற்கை விட்டுச்சென்ற நிலம், நீர், காற்று உள்ளிட்ட வளங்களை எவ்வித சேதாரமும் இல்லாமல், எதிர்கால தலைமுறைக்கு விட்டுச் செல்ல வேண்டிய பொறுப்பு, ஒவ்வொருவருக்கும் உண்டு என்பதை, அன்றாடம் நடக்கும் நிகழ்வுகள் உணர்த்துகின்றன. இதற்கு உதாரணமாக, திருப்பூர் நிலவும் குப்பை பிரச்னையை முன்வைக்கின்றனர், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

வளம் மீட்கும் பூங்காக்கள் திருப்பூர் உருவான காலம்தொட்டு, இதுவரை இல்லாத அளவுக்கு குப்பை பிரச்னை, தலையாய பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது. மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரித்து, அதை விற்பனை செய்வதும்; மக்காத குப்பையை மறுசுழற்சி மற்றும் மறுபயன்பாட்டுக்கு வழங்கி வருமானம் ஈட்டுவதும் ஒரு வளம் தான்.

அதனால் தான் 'குப்பையில் இருந்து செல்வம்' என்ற அடிப்படையில், குப்பை மேலாண்மை வாயிலாக ஊரை சுத்தமாக வைத்துக் கொள்வதுடன், வருவாய் ஈட்டும் தொழிலாகவும் அது மாறியிருக்கிறது. இதனால் தான், ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்புகளிலும் குப்பை கொட்டும் இடங்கள் 'வளம் மீட்பு பூங்கா' எனப்படுகிறது.

நாளை

இன்றியமையாத

நீர் மேலாண்மை

நல்லாறில் நன்னீர் ஓட வேண்டும் திருப்பூரில் காலம்காலமாக பாறைக்குழியில் தான் குப்பை கொட்டப்பட்டு வருகிறது. கிராம ஊராட்சி பகுதிகளில் மயானம், ஓடை, நதிக்கரையோரங்களில் குப்பை கொட்டி, அதை எரியூட்டுவது தொடர்கிறது. அதன் விளைவு நீரும், நிலமும் மாசடைந்து, மனித குலத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது என்பதை, மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் ஆய்வறிக்கை உறுதிபடுத்துகிறது. திருப்பூரில், குப்பை மேலாண்மையின் அவசியம் உணர்ந்த மாநகராட்சி நிர்வாகம், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் முழு கவனம் செலுத்தி, குப்பையில் இருந்து வளம் காணும் முயற்சியில் ஈடுபட துவங்கியிருக்கிறது. அதே போன்று அவிநாசி, பூண்டி, திருப்பூரின் பெரும் பகுதி வளமாகவும், மக்களின் வாழ்வாதாரம் செழிப்பாகவும் இருக்க காரணமாக இருந்த உள்ளூரின் வளமான நல்லாறு, ஆக்கிரமிப்பால் சுருங்கி, பராமரிப்பின்றி உருக்குலைந்திருக்கிறது. நீர்நிலை மீட்டெடுக்கப்பட்டு, அதில் மீண்டும் நன்னீர் வழிந்தோடினால் மட்டுமே, திருப்பூரின் எதிர்காலம் பசுமையாய் இருக்கும். - டாக்டர் வீரபத்மன், செயலாளர்,தமிழ்நாடு கழிவு மேலாண்மை மன்றம்.



குளத்துக்கு வந்த அத்திக்கடவு நீர் பறவைகள் சரணாலயமான நஞ்சராயன் குளத்தை, கழிவுகளை சுமந்து வரும் நல்லாற்று நீர்தான் நிரப்புகிறது. 'நஞ்சராயன் குளத்தில் கழிவுநீர் கலக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கடந்த, 2017ல், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்த தாமோதரன் கூறுகையில்,''ஐகோர்ட் உத்தரவுப்படி பொதுப்பணித்துறை, மாசுக்கட்டுப்பாடு வாரியம், மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள், நஞ்சராயன் குளத்தை ஆய்வு செய்தனர். அப்போது, நீர்வளத்துறை பவானி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளராக இருந்த சிவலிங்கம் முயற்சியால், அத்திக்கடவு - அவிநாசி திட்ட நீர், நஞ்சராயன் குளத்துக்கு கொண்டு வரப்பட்டது,'' என்றார்.



நிரந்தரத் தீர்வு அவசியமானது நல்லாறு நீர்நிலைகள், திருப்பூரின் நீர் வளம்; அவற்றின் நிலை கவலைக்குரியதாகவே இருக்கிறது. நல்லாறு வழித்தடத்தில் இயற்கையாய் அமைந்துள்ள நஞ்சராயன் குளம், பல்வேறு பறவைகள் வந்து செல்லும் பல்லுயிர் சூழலுக்கு ஏற்ற இடமாக இருந்ததால், அதில் தேங்கும் கழிவுநீரை வெளியேற்றி, நன்னீரை நிரப்பி, அக்குளத்தில் உயிர்ச்சூழல் மண்டலத்தை காப்பாற்ற நினைத்தோம். சம்மந்தப்பட்ட துறையினரின் ஒத்துழைப்புடன் அத்திக்கடவு திட்டத்தில் அக்குளம் இணைக்கப்பட்டது. 'நோய்நாடி நோய்முதல் நாடி, அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்' என்பது வள்ளுவன் வாக்கு; ஒரு நோயின் அறிகுறியை சரி செய்வதை காட்டிலும், அதற்கான காரணத்தை அறிந்து, குணப்படுத்த வேண்டும். அதே போன்று, கழிவுநீரால் அசுத்தமடையும் நல்லாறு உள்ளிட்ட நீர் நிலைகளில் உருவாகும் ஆகாய தாமரை உள்ளிட்ட களைச்செடிகளை மேலோட்டமாக அகற்றி, சுத்தம் செய்வதை காட்டிலும், அந்நீர் மாசுபடுவதற்கான காரணத்தை அடிமட்ட நிலையில் ஆராய்ந்தறிந்து, அதை சரி செய்வதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்: அதுவே நிரந்தர தீர்வாக அமையும். - சிவலிங்கம், தலைமை பொறியாளர் (ஓய்வு) நீர்வளத்துறை, கோவை மண்டலம்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us