ADDED : ஜன 11, 2024 07:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம், : திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க செயலாளர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது:
கடந்த ஆண்டு, பிப்., 16 அன்று, ஜவுளி உற்பத்தியாளருடன் கூலி உயர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. உயர்த்தப்பட்ட கூலியை, ஜவுளி உற்பத்தியாளர்கள் சிலர் குறைத்து வழங்குவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
எனவே, ஒப்பந்தம் செய்தபடி கூலியை உயர்த்தி வழங்குவதற்கான வழிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம், சுக்கம்பாளையம் சின்னம்மன் கோவில் மண்டபத்தில், நாளை (12ம் தேதி) காலை, 10:00 மணிக்கு நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.