/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பழனியப்பா பள்ளியில் களைகட்டிய கலை திருவிழா
/
பழனியப்பா பள்ளியில் களைகட்டிய கலை திருவிழா
ADDED : அக் 09, 2024 12:32 AM

அவிநாசி : அவிநாசி, சேவூர் ரோடு, மாமரத்தோட்டத்திலுள்ள பழனியப்பா இன்டர்நேஷனல் சீனியர் செகன்டரி பள்ளியில், 2024 - 25ம் கல்வியாண்டுக்கான ஆண்டு விழா 'களம் - 2024' என்ற பெயரில் நடைபெற்றது.
பள்ளி தாளாளர் ராஜ்குமார், செயலாளர் மாதேஸ்வரி ஆகியோர் தலைமை வகித்தனர். பள்ளி நிர்வாக இயக்குனர் பிரகாஷ், கல்வி திட்ட இயக்குனர் சதீஷ்குமார், பள்ளியின் அறக்கட்டளை உறுப்பினர்களான அபிநயா பிரகாஷ், நிவேதிகா சதீஷ்குமார் முன்னிலை வகித்தனர்.
மாணவ, மாணவியரின் நடனம், நகைச்சுவை நாடகங்கள் அனைவரையும் கவர்ந்தன. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ராமு, சாதனை மாணவர்களை பாராட்டினார். கவுரவ விருந்தினராக பழனியப்பா பள்ளி ஆலோசகர் கிருஷ்ணன் கோவிந்தராஜ் பங்கேற்றார்.
முன்னதாக பள்ளி முதல்வர் வித்யாசங்கர், பள்ளியின் சாதனைகள் குறித்து பேசினார். ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.