/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
களைகட்டிய பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள்
/
களைகட்டிய பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள்
ADDED : ஜன 08, 2024 01:50 AM

அனுப்பர்பாளையம்;திருப்பூர் கொங்கு வர்த்தக கூட்டமைப்பு சார்பில், கொங்கு குடும்ப பொங்கல் விழா, அவிநாசி ரோடு அம்மாபாளையம் ஸ்ரீ கருணை அம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
தலைவர் வசந்தகுமார், தலைமை வகித்தார். செயலாளர் பாலுச்சாமி, முன்னிலை வகித்தார். இணை செயலாளர் சிவக்குமார், வரவேற்றார். மெஜஸ்டிக் கந்தசாமி, ஆர்ம்ஸ்ட்ராங் பழனிச்சாமி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
காலை விநாயகர் வழிபாட்டை தொடர்ந்து, பெண்கள் பொங்கலிட்டு வழிபட்டனர். விளையாட்டு போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
ஈசன் பெருஞ் சலங்கையாட்டம், வள்ளி கும்மியாட்டம், கம்பத்தாட்டம், காவடியாட்டம், சிலம்பாட்டம், உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
காங்கேயம் மாடு, குதிரை ஆகியவற்றை காட்சிப்படுத்தி இருந்தனர்.அனைவரும் குடும்பத்தோடு கலந்து கொண்டனர்.