/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மக்களை பாடாய்ப்படுத்தும் 'வீக் எண்ட்' பயணம்; பஸ் பற்றாக்குறையால் பயணிகள் தவிப்பு
/
மக்களை பாடாய்ப்படுத்தும் 'வீக் எண்ட்' பயணம்; பஸ் பற்றாக்குறையால் பயணிகள் தவிப்பு
மக்களை பாடாய்ப்படுத்தும் 'வீக் எண்ட்' பயணம்; பஸ் பற்றாக்குறையால் பயணிகள் தவிப்பு
மக்களை பாடாய்ப்படுத்தும் 'வீக் எண்ட்' பயணம்; பஸ் பற்றாக்குறையால் பயணிகள் தவிப்பு
ADDED : ஜூலை 10, 2025 11:19 PM

திருப்பூர்; வார விடுமுறை நாட்களில், வெளியூர் செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகளவில் உள்ள நிலையில், திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்டில் திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட வழித்தடங்களில் இயங்கும் பஸ்கள், நள்ளிரவு நேரங்களில் போதியளவு இயக்கப்படாததால் பயணிகள் பரிதவிக்கின்றனர்.
பிற ஊர் மற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் திருப்பூரில், வார விடுமுறை, விசேஷ நாட்களுக்கு தங்கள் சொந்த ஊர் செல்வதை, பலரும் வழக்கமாக கொண்டுள்ளனர். குறிப்பாக, வார விடுமுறை நாட்களான வெள்ளி, சனி நாட்களில், பஸ் ஸ்டாண்டில் பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்படும்.திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து கரூர், திருச்சி, தஞ்சாவூர் வழித்தடங்களுக்கு பஸ்கள் இயக்கப்படும் நிலையில், அந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் அதிகளவில் கூடுகின்றனர். இரவு, 10:30 மணி வரை, பஸ் போக்குவரத்து சீராக உள்ள நிலையில், இரவு, 11:30 மணிக்கு மேல், போதியளவு பஸ்கள் இயக்கப்படுவதில்லை. இதனால், தங்களின் பணி முடித்து, குடும்பம், குழந்தைகளுடன் நள்ளிரவு கடந்து, பயணம் மேற்கொள்ள வரும் பயணிகள், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறது.
சில மணி நேர இடைவெளிக்கு பின், பஸ் வரும் போது, நுழைவு பகுதியிலேயே பயணிகள் முண்டியடித்து ஏறுவதால், அதற்குரிய பஸ் 'ரேக்'கில் நீண்ட நேரம் காத்திருக்கும் பயணிகளுக்கு பஸ்சில் இருக்கை கிடைப்பதில்லை. இதனால், குழந்தைகள், முதியவர்களுடன் வரும் பயணிகள், மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். போக்குவரத்து துறை ஊழியர்கள், காவல்துறையினர் கூட, பயணிகளின் இந்த அலைகழிப்பை, கண்டுகொள்வதில்லை. இதனால், பயணிகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.