/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தொரவலூர் ஊராட்சியில் மீண்டும் வாரச்சந்தை
/
தொரவலூர் ஊராட்சியில் மீண்டும் வாரச்சந்தை
ADDED : ஜன 15, 2024 01:24 AM
அனுப்பர்பாளையம்:திருப்பூர் ஒன்றியம், தொரவலுார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகில் ஞாயிற்றுக்கிழமை தோறும் வார சந்தை செயல்பட்டு வந்தது.
பல்வேறு பகுதியை சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் தங்கள் பொருட்களை விற்பனை செய்து, வந்தனர்.
கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக வாரச்சந்தை மூடப்பட்டது. தற்போது அதே இடத்தில் மீண்டும் வாரச்சந்தையை திறக்க ஊராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.
வாரச்சந்தைக்கு தேவையான கடை மேடை, மின் விளக்கு, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டது. நேற்று எம்.எல்.ஏ.,விஜயகுமார் திறந்து வைத்தார்.
ஊராட்சி தலைவர் தேவகி, துணை தலைவர் மவுலீஸ்வரன், மாவட்ட கவுன்சிலர் சாமிநாதன், ஊராட்சி உறுப்பினர்கள் கார்த்தி, கணேசன், சித்ரா, கிராமிய மக்கள் இயக்க நிர்வாகிகள் சம்பத்குமார், செல்வம், சத்தியமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முதல் நாளான நேற்று 40க்கும் மேற்பட்ட வியாபாரிகள் பங்கேற்று பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டனர்.