/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வெல்டிங் பேப்ரிகேஷன் இலவச பயிற்சி
/
வெல்டிங் பேப்ரிகேஷன் இலவச பயிற்சி
ADDED : பிப் 08, 2026 05:16 AM
திருப்பூர்: கனரா வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் வழங்கும் 30 நாள் வெல்டிங் அண்ட் பேப்ரிகேஷன் -பயிற்சியில் ஆர்வமுள்ளவர்கள் இணைய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர், கனரா வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலைய இயக்குனர் சதீஷ்குமார் அறிக்கை:
திருப்பூர், காங்கயம் ரோடு, முதலிபாளையம் பிரிவில் உள்ள கனரா வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் வெல்டிங் அண்ட் பேப்ரிகேஷன், -30 நாள் முழு நேர பயிற்சி வகுப்புக்கான நேர்காணல் வரும், 10ம் தேதி துவங்குகிறது. எழுத படிக்க தெரிந்த, 18 - 45 வயதுக்குட்பட்ட ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
பயிற்சிக்கு கட்டணமில்லை. இருபாலருக்கும் தனித்தனி தங்கும் விடுதி வசதியுள்ளது. காலை, -மாலை தேநீர், உணவு இலவசம். பயிற்சியின் முடிவில் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சிக்கு பின் தொழில் துவங்க கடன் ஆலோசனைகளும் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள்,'கனரா வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், 335/பி1, வஞ்சியம்மன் கோவில் எதிரில், முதலிபாளையம் பிரிவு, காங்கயம் ரோடு, திருப்பூர் - 641606' என்ற முகவரிக்கு நேரில் வந்து விபரம் அறியலாம். முதலில் வருபவருக்கு முன்னுரிமை வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு, 94890 43923, 90804 42586 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

