ADDED : ஏப் 15, 2025 06:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சமத்துவ நாள் விழா, திருப்பூரில் நேற்று நடந்தது. கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். மேயர் தினேஷ்குமார் முன்னிலை வகித்தார். அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது படத்துக்கு மாலை அணிவித்து, மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது. சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
மொத்தம், 2,311 பயனாளிகளுக்கு, 9.46 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கலெக்டர், டி.ஆர்.ஓ., மேயர் ஆகியோர் துாய்மை பணியாளர்களுடன் அமர்ந்து உணவு உட்கொண்டனர். மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் புஷ்பாதேவி, மாநகராட்சி துணை கமிஷனர் சுந்தரராஜன், மண்டல தலைவர்கள் பத்மநாபன், கோவிந்தராஜ், உமா மகேஸ்வரி பங்கேற்றனர்.