/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நல வாரிய ஓய்வூதியதாரர்கள் வாழ்நாள் சான்று வழங்க கெடு
/
நல வாரிய ஓய்வூதியதாரர்கள் வாழ்நாள் சான்று வழங்க கெடு
நல வாரிய ஓய்வூதியதாரர்கள் வாழ்நாள் சான்று வழங்க கெடு
நல வாரிய ஓய்வூதியதாரர்கள் வாழ்நாள் சான்று வழங்க கெடு
ADDED : ஏப் 18, 2025 06:46 AM
திருப்பூர்; திருப்பூர் மாவட்ட தொழிலாளர் துறை உதவி கமிஷனர் (சமூக பாதுகாப்பு திட்டம்) செந்தில்குமார் அறிக்கை:
தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியங்களில் பதிவு புதுப்பித்தல், கேட்பு மனுக்கள் போன்ற அனைத்துவிதமான விண்ணப்பங்களும், www.tnuwwb.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக பெறப்படுகின்றன. திருப்பூர் மாவட்டத்தில் நலவாரியங்களில் பதிவு செய்த, 60 வயது நிறைவடைந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள், மாதாந்திர ஓய்வூதியம் பெற்று வருகின்றனர்.
ஓய்வூதியர்கள் தங்கள் வாழ்நாள் சான்றிதழை உரிய ஆவணங்களுடன், இணையதளத்தில் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கவேண்டும். நடப்பு 2025 - 26ம் ஆண்டுக்கான ஆயுள் சான்றை, வரும் 30ம் தேதிக்குள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யவேண்டும். ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, ஓய்வூதிய உத்தரவு நகல், ஆயுள் சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வங்கி கணக்கு புத்தக நகல் மற்றும் தொழிலாளியின் நேரடி புகைப்படம் ஆகியவற்றுடன், தொழிற் சங்கம் அல்லது பொது சேவை மையம், கம்ப்யூட்டர் சென்டரில் பதிவேற்றம் செய்யலாம். கூடுதல் விவரங்களுக்கு, 0421 2477276 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.