ADDED : ஜூலை 04, 2025 12:51 AM

அவிநாசி; திருமுருகன்பூண்டி நகராட்சியில், நகர்ப்புற நலவாழ்வு மையக் கட்டடத்தை காணொளி காட்சி வாயிலாக தமிழக முதலமைச்சர் துவக்கி வைத்தார்.
அவிநாசி அருகேயுள்ள திருமுருகன்பூண்டி நகராட்சிக்குட்பட்ட 7வது வார்டில், 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின், நகர்ப்புற நலவாழ்வு மைய புதிய கட்டடம் நேற்று திறக்கப்பட்டது.
இதனை திருமுருகன்பூண்டி நகராட்சி தலைவர் குமார் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், நகராட்சி துணைத் தலைவர் ராஜேஸ்வரி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஆனந்த்ராஜ், வட்டார மருத்துவ அலுவலர் சக்திவேல், மாவட்ட சுகாதார அலுவலக நேர்முக உதவியாளர் செல்வராஜ், சுகாதார ஆய்வாளர் பரமன், மருத்துவ அலுவலர்கள் ஹேமலதா, ரஞ்சித், லோகநாதன், நகராட்சி கமிஷனர் பால்ராஜ் (பொறுப்பு), 7வது வார்டு கவுன்சிலர் முருகசாமி மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.