ADDED : பிப் 10, 2026 06:52 AM
திருப்பூர்: கோவை வடக்கு, பீளமேடு ரயில்வே ஸ்டேஷன்களில் பொறியியல் மேம்பாட்டு பணி நடக்கிறது.
இதனால், கோவை செல்ல வேண்டிய ரயில்கள் திருப்பூர் - போத்தனுார் வழித்தடத்தில் திருப்பி விடப்படுகிறது. வரும், 11ம் தேதி, சென்னை எழும்பூர் - மங்களூரு வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் (எண்:16159) வழக்கமான வழித்தடமான பீளமேடு, கோவை வடக்கு, கோவை ஜங்ஷன் செல்லாது.
திருப்பூரில் இருந்து இருகூர் வழியாக போத்தனுார் சென்று அங்கிருந்து, பயணத்தை தொடரும்.
திப்ரூகர் - கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸ் (எண்:22504) வழக்கமாக திருப்பூரில் புறப்பட்டு கோவையில் நின்று பாலக்காடு செல்லும்.
வழித்தட மாற்றத்தால், கோவை செல்லாது; பயணிகள் வசதிக்காக போத்தனுாரில் இரண்டு நிமிடம் நின்று, பாலக்காடு செல்லும். வரும், 11 மற்றும், 14 ம் தேதி, ஆலப்புழா - தன்பாத் எக்ஸ்பிரஸ் (எண்:13352) பாலக்காடு கடந்து, போத்தனுாரில் நின்று, திருப்பூர் வந்து சேரும்; கோவை ஜங்ஷன் செல்லாது என சேலம் ரயில்வே கோட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
