தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பிளஸ் 2க்கு பின் என்ன படிக்கலாம்? 'தினமலர்' வழிகாட்டி துவக்கம்  

 பிளஸ் 2க்கு பின் என்ன படிக்கலாம்? 'தினமலர்' வழிகாட்டி துவக்கம்  

 பிளஸ் 2க்கு பின் என்ன படிக்கலாம்? 'தினமலர்' வழிகாட்டி துவக்கம்  


ADDED : ஏப் 03, 2026 07:48 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 03, 2026 07:48 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்:திருப்பூரில் 'தினமலர்' கல்வி மற்றும் வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி ஏப்ரல் 4 ல் துவங்குகிறது; நாளையும் (ஏப். 5ம் தேதி) நடக்கிறது. கருத்தரங்கு மற்றும் கண்காட்சியில் மாணவ, மாணவியர் பங்கேற்று பயன் பெறலாம்.

'தினமலர்' நாளிதழ், கிருஷ்ணா கல்வி நிறுவனம், அம்ரிதா விஸ்வ வித்யாலயா நிறுவனங்கள் சார்பில், 'தினமலர்' கல்வி மற்றும் வழிகாட்டி நிகழ்ச்சி, திருப்பூர், தாராபுரம் ரோடு, வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில் இன்று துவங்குகிறது. காலை 10:00 மணி கருத்தரங்கம் துவங்குகிறது. சிறப்பு விருந்தினர்கள் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைக்கின்றனர்.

கருத்தரங்கு

வழிகாட்டி நிகழ்ச்சியில், 'நீங்களும் விஞ்ஞானி ஆகலாம்' என்ற தலைப்பில் இந்திய பாதுகாப்புத்துறை ராணுவ விஞ்ஞானி டில்லிபாபு; 'நீட், ஜே.இ.இ. தேர்வு வாய்ப்புகள்' குறித்து கல்வியாளர் அஸ்வின் உள்ளிட்டோர் பேசுகின்றனர்; கருத்தரங்கிலேயே மாணவ, மாணவியர், பெற்றோரின் கேள்விகள், சந்தேகங்களுக்கும் பதில் அளிக்கின்றனர்.

அரங்குகள்

மாலை 6:00 மணி வரை தொடர்ந்து நிகழ்ச்சி நடக்கிறது. கருத்தரங்கில் பங்கேற்கும் மாணவ, மாணவியர், 70 க்கும் மேற்பட்ட உயர் கல்வி நிறுவனங்கள், சிறந்த பல்கலைக்கழகங்கள் அமைத்துள்ள அரங்குகளை பார்வையிடலாம். பிளஸ் 2வுக்கு பின் என்ன படிக்கலாம், எந்த படிப்பை தேர்வு செய்தால் எதிர்காலம் சிறப்பாக இருக்கும், வேலை வாய்ப்பு தரும் படிப்புகள் எவை என்பது குறித்து கருத்தரங்கில் தெளிவு பெறும் மாணவ, மாணவியர், கண்காட்சியில் புத்தம் புதிய படிப்புகள் எவை எவை, மருத்துவம், இன்ஜி. தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, சமூக ஊடகங்கள், பிக்டேட்டா, டிஜிட்டல் மார்க்கெட்டிங், ஆக்மென்டட் ரியாலிட்டி, ரோபாட்டிக்ஸ், சட்டம், அறிவியல் படிப்புகள் உள்ளிட்ட படிப்புகள், அப்ளிகேஷன் துவங்கி அட்மிஷன் வரை அனைத்து கேள்விகளுக்கும் தெளிவு பெறலாம்.

முன்பதிவு

வழிகாட்டி நிகழ்ச்சியில் பங்கேற்க, இலவச முன்பதிவுக்கு 95667 77833 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு RGN என்ற டைப் செய்து அனுப்பலாம். மேலும், 'க்யூஆர்கோடு' ஸ்கேன் செய்தும், மாணவ, மாணவியர் தங்கள் வருகையை முன்பதிவு செய்து கொள்ளலாம். இன்று காலை நேரடியாக அரங்கிலும் பெயரை பதிவு செய்து, நிகழ்வில் உடனடியாக இலவசமாக பங்கேற்கலாம். வழிகாட்டி நிகழ்ச்சியில் மாணவ, மாணவியருடன் பெற்றோரும் பங்கேற்கலாம்.

பரிசு காத்திருக்கு! உயர்கல்வி குறித்த கேள்விகளுக்கு விடை தெரிந்து கொள்ளும் மாணவ, மாணவியர், கருத்தரங்கின் இடையிடையே கேட்கப்படும் பொது அறிவு தொடர்பான கேள்விகளுக்கு சரியான பதில் அளிக்கலாம். பதில் அளிப்பவருக்கு 'லேப்டாப்', 'டேப்லெட்', வாட்ச் பரிசு காத்திருக்கிறது. பிளஸ் 2வுக்கு பின் எந்த உயர்கல்வியை தேர்வு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். விடையளித்து பரிசை பெற்று மனநிறைவோடு செல்லுங்கள்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us