/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தொல்லியல் சுற்றுலா திட்டம் என்னாச்சு? நடவடிக்கை இல்லாததால் அதிருப்தி
/
தொல்லியல் சுற்றுலா திட்டம் என்னாச்சு? நடவடிக்கை இல்லாததால் அதிருப்தி
தொல்லியல் சுற்றுலா திட்டம் என்னாச்சு? நடவடிக்கை இல்லாததால் அதிருப்தி
தொல்லியல் சுற்றுலா திட்டம் என்னாச்சு? நடவடிக்கை இல்லாததால் அதிருப்தி
ADDED : டிச 17, 2024 10:00 PM
உடுமலை; உடுமலை பகுதியிலுள்ள வரலாற்று சின்னங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த, 'தொல்லியல் வரலாற்று சுற்றுலா', திட்டம் செயல்படுத்தப்படும் என்ற சுற்றுலாத்துறையினர் அறிவிப்பு கிடப்பில் போடப்பட்டுள்ளது.
உடுமலை அருகிலுள்ள திருமூர்த்திமலை, அமராவதி அணை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களாக உள்ளன.
இப்பகுதிகளில், சுற்றுலாத்துறை சார்பில் நீண்ட காலமாக எவ்வித மேம்பாட்டு பணிகளும் மேற்கொள்ளப்படாமல், மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இந்நிலையில், வரலாற்று ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் சார்பில், சுற்றுலா மேம்பாட்டு திட்டங்களில், சுற்றுப்பகுதிகளிலுள்ள, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, பகுதிகளையும் இணைத்து, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கடந்த, 2021ல் கோரிக்கை எழுந்தது.
அப்போது, முதற்கட்டமாக, தளியை தலைமையிடமாகக்கொண்டு ஆட்சி செய்த, சுதந்திர போராட்ட வீரர் எத்தலப்பர் சார்ந்த, வரலாற்றுச்சின்னங்கள் குறித்து, மாவட்ட சுற்றுலா துறை அலுவலர் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.
பின்னர், சுற்றுலாத்துறை தரப்பில், 'தொல்லியல், வரலாறு மற்றும் கிராம சுற்றுலா போன்ற சுற்றுலாக்கள் தற்போது முக்கியத்துவம் பெற்று வருகிறது. இத்தகைய சுற்றுலா தலங்களை, பிரபலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதனால், பிற மாவட்ட, மாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணியரை ஈர்க்க முடியும். அதன் வாயிலாக, சுற்றுலா சார்ந்த வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்.
உடுமலை சுற்று வட்டாரத்திலுள்ள, தொல்லியல் நினைவு சின்னங்களை பட்டியலிட்டு, அவற்றை, பிரபலப்படுத்தவும், சுற்றுலா பயணியரை ஈர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தளி எத்தலப்பர் உள்ளிட்ட வரலாற்று சின்னங்கள் பட்டியலிடப்பட்டு, தகவல் பலகை வைத்தல் உட்பட பணிகள் முன்னெடுக்கப்படும்,' என தெரிவிக்கப்பட்டது.
ஆனால், எவ்வித பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. சுற்றுலா தலங்களும் மேம்படுத்தப்படாத நிலையில், தொல்லியல் வரலாற்று சுற்றுலா திட்டமும் உடுமலை பகுதியில், செயல்படுத்தப்படாமல் இருப்பதால், இப்பகுதி மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.