/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நேதாஜி மைதான மேம்பாடு என்னாச்சு? விளையாட்டு ஆர்வலர்கள் கோரிக்கை
/
நேதாஜி மைதான மேம்பாடு என்னாச்சு? விளையாட்டு ஆர்வலர்கள் கோரிக்கை
நேதாஜி மைதான மேம்பாடு என்னாச்சு? விளையாட்டு ஆர்வலர்கள் கோரிக்கை
நேதாஜி மைதான மேம்பாடு என்னாச்சு? விளையாட்டு ஆர்வலர்கள் கோரிக்கை
ADDED : பிப் 10, 2025 10:48 PM

உடுமலை; தாஜி மைதானத்தை பராமரித்து, உள் விளையாட்டு அரங்கம் அமைக்க வேண்டும் என விளையாட்டு ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடுமலை நகரின் மையப்பகுதியில், 6.30 ஏக்கர் பரப்பளவில், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சொந்தமான நேதாஜி மைதானம் அமைந்துள்ளது. தற்போது இம்மைதானத்தை நடைபயிற்சி செல்வோர், கிரிக்கெட், ஹாக்கி, பாஸ்கட் பால், புட்பால், ஸ்கேட்டிங் பயிற்சி பெறுவோர் என அதிகளவிலான விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
தனியார் சார்பில், பல்வேறு விளையாட்டு போட்டிகளும் நடத்தப்படுகின்றன. ஆனால், மைதானத்தை பராமரிப்பதில் தொடர்ந்து சிக்கல் நிலவுகிறது.
இப்பிரச்னைக்கு தீர்வாக, தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால், உள்விளையாட்டு அரங்கம் அமைக்க சில ஆண்டுகளுக்கு முன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்பின்னர் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
மழைக்காலத்தில், மைதானத்தின் பல இடங்களில், தண்ணீர் தேங்கி, சேறும், சகதியுமாக மாறுகிறது; அதன்பிறகு, பார்த்தீனியம் உள்ளிட்ட களைச்செடிகள் பரவலாக ஆக்கிரமித்து கொள்கிறது.
உடுமலை சுற்றுப்பகுதி இளைஞர்கள், மாணவ, மாணவியரின் விளையாட்டு ஆர்வத்துக்கு ஆதாரமாக உள்ள நேதாஜி மைதானத்தை மேம்படுத்த வேண்டும் என, தொடர் கோரிக்கை விடப்பட்டு வருகிறது. குறிப்பாக, உள்விளையாட்டு அரங்கம் அமைக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என, விளையாட்டு ஆர்வலர்கள் அரசுக்கு மீண்டும் கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.
இது குறித்து, தமிழக அரசு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.