sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கட்டிய கட்டடத்துக்கு எஸ்டிமேட் எதற்கு? பேரூராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் 'காட்டம்'

/

கட்டிய கட்டடத்துக்கு எஸ்டிமேட் எதற்கு? பேரூராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் 'காட்டம்'

கட்டிய கட்டடத்துக்கு எஸ்டிமேட் எதற்கு? பேரூராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் 'காட்டம்'

கட்டிய கட்டடத்துக்கு எஸ்டிமேட் எதற்கு? பேரூராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் 'காட்டம்'


ADDED : ஜன 29, 2025 03:45 AM

Google News

ADDED : ஜன 29, 2025 03:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவிநாசி; அவிநாசி பேரூராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்களின் மாதாந்திர கூட்டம், பேரூராட்சி தலைவர் தனலட்சுமி தலைமையில், துணை தலைவர் மோகன், செயல் அலுவலர் சண்முகம், சுகாதார ஆய்வாளர் கருப்பசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கவுன்சிலர்கள் விவாதம்:

தங்கவேலு (தி.மு.க.,): அவிநாசி பேரூராட்சி, 2வது வார்டில் மடத்துப்பாளையத்தில், ஏ.டி., காலனி மக்கள் பயன்படுத்தும் மயானத்துக்கு செல்லும் பாதையில் பாலம் அமைத்து தர வேண்டும். சபரி கார்டன் பகுதியில், சாக்கடை கால்வாய் கட்ட மூன்று கூட்டத்தில் கோரிக்கை வைத்தும், தீர்மானம் நிறைவேற்றவில்லை.

திருமுருகநாதன் (தி.மு.க.,): பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டு பகுதிகளிலும், கிணறுகள் மற்றும் ஆழ்துளை குழாய் கிணறுகளை பயன்பாட்டில் இல்லாததை கண்டறிந்து மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். 11வது வார்டிலுள்ள ரிசர்வ் சைட் பகுதியை கம்பி வேலி அமைத்து பாதுகாப்பு ஏற்படுத்திட வேண்டும். அவிநாசி தாலுகா அலுவலகம் முன் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தும் வகையில் வைக்கப்படும் பிளக்ஸ் பேனர்களை வைக்க அனுமதிக்க கூடாது.

ஸ்ரீதேவி (அ.தி.மு.க.,): கைகாட்டிப்புதுார் பகுதியில் உள்ள பூங்காவுக்கு சுற்றுச் சுவர் இல்லாமல், கதவும் உடைந்து விட்டது. விளையாட்டு உபகரணங்கள் பழுதடைந்து குழந்தைகள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது. சோலார் விளக்கு எரியாததால், சமூக விரோத செயல்கள் அதிகரித்து விட்டது. இந்த நிர்வாகம் பொறுப்பேற்றதிலிருந்து, சொல்லியும் நடவடிக்கை எடுக்கவில்லை.

சித்ரா (அ.தி.மு.க.,): பேரூராட்சிக்குட்பட்ட வணிக வளாகங்கள், கடைகள் மறு ஏலம் விடப்படுமா அல்லது உரிமங்கள் புதுப்பிக்கப்படுமா? என தெளிவான பதில் பேரூராட்சி நிர்வாகம் தர வேண்டும்.

சசிகலா (தி.மு.க.,): வ.உ.சி., பூங்காவுக்கு செக்யூரிட்டி இல்லாததால் விளையாட்டு மைதானம் மற்றும் குடிநீர் தொட்டி உள்ள பகுதிகளில் சமூக விரோத செயல்கள் நடைபெறுகிறது.

உடனடியாக செக்யூரிட்டிகளை பணியமர்த்தி, அவிநாசி நகருக்கு குடிநீர் வழங்கும் தொட்டிகளை பாதுகாக்க வேண்டும். சேவூர் ரோடு - பண்ணாரி அம்மன் கோவில் சந்திப்பில் ரவுண்டானாவை சுற்றி வேகத்தடை அமைக்க வேண்டும்.

ரவுண்டானாவில் உயர் கோபுர மின் விளக்கை உடனடியாக பொருத்த வேண்டும். ரவுண்டானாவின் சுற்றளவை குறைக்க பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை.

கோபாலகிருஷ்ணன் (காங்.,): அவிநாசி பழைய பஸ் ஸ்டாண்டில் கட்டியுள்ள வணிக வளாகத்துக்கு, நிதியிலிருந்து 1.20 கோடி ரூபாய் எவ்வாறு ஒதுக்கப்படும்? அதற்கு செயல் அலுவலருக்கு அதிகாரம் உள்ளதா? எதன் அடிப்படையில் முடிந்து போன பணிகளுக்கு பணி எஸ்டிமேட் போட்டு தீர்மானம் வைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன், 6 கோடி ரூபாய் ஒதுக்கி பணிகள் துவங்க தீர்மானமாக வைக்கப்பட்ட திட்ட மதிப்பீடு மற்றும் நிர்வாக அனுமதி கடிதம் ஆகியவற்றை வெளிப்படையாக காட்ட வேண்டும். பேரூராட்சிக்கு வங்கிகளில் எவ்வளவு தொகை இருப்பு உள்ளது?

தனலட்சுமி (தலைவர்): ஒப்பந்ததாரர் சரிவர பணிகளை செய்யாததால், 2வது ஒப்பந்ததாரர் மூலம் முழுமையாக பணிகள் முடித்த பின், தற்போது மன்றத்தில் வைக்கப்பட்டுள்ள பணிகளுக்கு நிதி ஒதுக்கி செய்து கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us