sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 திருப்பூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி என்னாச்சு! மாவட்டம் உருவாக்கி 17 ஆண்டுகளாச்சு

/

 திருப்பூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி என்னாச்சு! மாவட்டம் உருவாக்கி 17 ஆண்டுகளாச்சு

 திருப்பூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி என்னாச்சு! மாவட்டம் உருவாக்கி 17 ஆண்டுகளாச்சு

 திருப்பூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி என்னாச்சு! மாவட்டம் உருவாக்கி 17 ஆண்டுகளாச்சு


ADDED : டிச 29, 2025 05:28 AM

Google News

ADDED : டிச 29, 2025 05:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: திருப்பூர் மாவட்டம் உருவாகி, 17 ஆண்டுகளாகியும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உருவாக்காததால், கோவை, ஈரோடு என இரு மாவட்டங்களின் கட்டுப்பாட்டில், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் செயல்படுவதால் நிர்வாக சிக்கல் அதிகரித்து வருகிறது.

திருப்பூர் மாவட்டம், 2009ல் உருவாக்கப்பட்டபோது, கோவை, ஈரோடு மாவட்ட பகுதிகள் இம்மாவட்டத்தில் இணைக்கப்பட்டன.தற்போது, திருப்பூர் மாவட்ட அளவில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் - 182, கூட்டுறவு சிக்கன கடன் சங்கங்கள் - 26, பிரதம கூட்டுறவு பண்டகம் -- 3, மொத்த விற்பனை பண்டகம் ஒன்று உள்ளது.

மேலும், கூட்டுறவு நகர வங்கி -- 3, தொடக்க வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி -- 9, வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம் -- 5, கூட்டுறவு சர்க்கரை ஆலை ஒன்று, நெசவாளர் கூட்டுறவு சங்கம் -- 40, விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் - 27, என மொத்தம் 297 சங்கங்கள் உள்ளன.

இவற்றில், 205 சங்கங்கள் கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியை சேர்ந்த, 7 கிளைகளிலும், 92 சங்கங்கள் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்குட்பட்ட, 6 கிளைகளிலும் கணக்கு வைத்து, செயல்பட்டு வருகின்றன.

திருப்பூர் மாவட்டம் தோற்றுவிக்கப்பட்டு, 17 ஆண்டுகளாகியும், இம்மாவட்டத்துக்கு தனியாக மத்திய கூட்டுறவு வங்கி இன்னும் துவக்கப்படவில்லை. அதனால், கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகள் பின்தங்கியுள்ளன.

திருப்பூர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வகையான கூட்டுறவு சங்கங்களுக்கும் நிதி ஒதுக்குதல், நிதி பயன்பாடு குறித்து ஆய்வு செய்தல், நிதி பயன்பாட்டின் மீது வசூல் நடவடிக்கையை கண்காணிப்பதில் சிக்கல் நீடிக்கிறது.

கோவை மற்றும் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் இருந்து புள்ளிவிபரங்கள் பெற்று, அவற்றை தொகுத்து நடவடிக்கை மேற்கொள்வதிலும் சிரமம் ஏற்படுகிறது. அனைத்து விவசாயிகளும், கோவை, ஈரோடு மாவட்டங்களையே சார்ந்திருக்க வேண்டியுள்ளது.

தொழில் வளர்ச்சி அடைந்த மாவட்டமாக திருப்பூர் இருப்பதால், தொழில்துறைக்கு தேவையான கடன் வழங்கவும், 'டிபாசிட்' திரட்டவும், மாவட்டத்துக்கு தனியாக மத்திய கூட்டுறவு வங்கி உருவாக்க வேண்டும், என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்ட விவசாயிகள் சார்பில் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில், 'திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்டு, பெரும்பாலான துறைகளின் மாவட்ட அளவிலான அலுவலகங்கள் உருவாக்கப்பட்டது.

ஆனால், இரு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளை பிரித்து, திருப்பூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உருவாக்க வேண்டும், என்ற கோரிக்கை மட்டும் நிலுவையில் உள்ளது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us