sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

எதை கைவிடுவது... எதை கைகொள்வது?

/

எதை கைவிடுவது... எதை கைகொள்வது?

எதை கைவிடுவது... எதை கைகொள்வது?

எதை கைவிடுவது... எதை கைகொள்வது?


ADDED : ஜன 12, 2025 11:54 PM

Google News

ADDED : ஜன 12, 2025 11:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்,; போகி என்றாலே பழையன கழிதல் என்கிற அடிப்படையில், பயன்படாத பொருட்களை தீயிலிட்டு எரிப்பதை வழக்கமாக கொண்டுள்ளோம். அதுபோலவே, நாம் ஒவ்வொருவரும், தவிர்க்கவேண்டியனவற்றை தவிர்த்து, மேன்மைதரும் நற்செயல்களை கடைபிடிப்பது மிகவும் அவசியம்.

திருப்பூர் மாவட்ட நிர்வாகமும், தனது செயல்பாடுகளில் சில திருத்தங்கள் சரி செய்து, மக்களின் மனதில் பொங்கலின் சுவையாக, தித்திக்க வேண்டும்.

கலெக்டரை நேரில் சந்தித்து, பிரச்னைகளை தெரிவிப்பதன்மூலம், தங்கள் நீண்ட கால பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு கிடைக்கும் என்கிற நம்பிக்கையிலேயே, வாரந்தோறும் திங்கள் கிழமை நடத்தப்படும் குறைகேட்பு கூட்டங்களில், ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று மனு அளிக்கின்றனர்.

பங்கேற்காத அதிகாரிகள்


ஆனால், பெரும்பாலான அரசு அலுவலர்கள், குறைகேட்பு கூட்டத்தில் முறையாக பங்கேற்பது கூட இல்லை. காலதாமதமாக வருவது; பாதியிலேயே எழுந்து சென்றுவிடுவது; சாக்கு போக்கு சொல்லி, கூட்டத்துக்கு வராமலேயே இருந்து விடுகின்றனர்.

பெரும்பாலான நாட்களில், கலெக்டரே, மதியம், 12:00 மணிக்கு பின்னர்தான் குறைகேட்பு கூட்டத்துக்குவருகிறார். விருந்தாளிபோல், சிறிது நேரம் மட்டும் தலைகாட்டிவிட்டு, புறப்பட்டுசென்று விடுகிறார்.

குறைகேட்பு கூட்ட நாட்களில் வேறு அரசு நிகழ்ச்சிகள் நடத்துவதை தவிர்க்கவேண்டும். காலை, 11:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரையினான குறைகேட்பு கூட்டத்தில், கலெக் டர் உள்பட அனைத்து அரசு அலுவலர்களும், முழுநேரமும் பங்கேற்பை உறுதிப்படுத்த வேண்டும்.

தீர்வு தான் முக்கியம்


மக்கள் அளிக்கும் மனுக்களை உரியவகையில் பரீசீலித்து, விரைந்து தீர்வு காணவேண்டும். மாதகணக்கில் கிடப்பில் போட்டுவிட்டு, முதல்வர், துணை முதல்வர், அமைச்சர் முதலான வி.ஐ.பி.,க்கள் வருகையின்போது, ஏதேதோ காரணங்களை குறிப்பிட்டு மனுக்களை தள்ளுபடி செய்து, முடித்துவைக்கும் போக்கை கைவிட வேண்டும்.

செயல்வடிவம் இல்லை


மாதந்தோறும் நடத்தப்படும் சாலை பாதுகாப்பு கூட்டத்தில், ரோடு சரியில்லை, சிக்னல், வேகத்தடை அமைக்கவேண்டும் என, போலீசார் உள்பட பல்வேறு துறையினர் ஆலோசனைகள் தெரிவிக்கின்றனர். ஆனால், அந்த கூட்டத்தில் தெரிவிக்கப்படும் எந்த ஆலோசனைகளுக்கும், செயல்வடிவம் கொடுப்பதில்லை என்பதே நிதர்சனம்.

மாதந்தோறும் பெயரளவில் சாலை பாதுகாப்பு கூட்டம் நடத்துவதை விட்டுவிட்டு, ஆக்கப்பூர்வமான திட்டங்களுக்கு உயிர் கொடுத்தால், விபத்து இல்லாத திருப்பூர் மாவட்டத்தை உருவாக்கலாம்.

அரைத்த மாவு

கலெக்டர் நடத்தும் அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டத்தில், பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. செய்தி மக்கள் தொடர்புத்துறையோ, பத்திரிகை செய்தியில், கூட்டத்தின் உண்மையான விவாதங்கள், அறிவுறுத்தல்களை தெரிவிப்பதில்லை. பல ஆண்டுகள் பழமையான ஒரே பத்திரிகை செய்தியையே, தேதியை மட்டும் மாற்றி வழங்குகின்றனர். ஆய்வுக்கூட்ட நிகழ்வுகளை, மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையிலான வெளிப்படைத்தன்மை கடைபிடிக்கப்பட வேண்டும்.

அடிபடும் நோக்கம்

சாலை பாதுகாப்பு, நுகர்வோர் விழிப்புணர்வு, பெண் குழந்தை பாதுகாப்பு என ஏராளமான விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் நிகழ்ச்சிகள் குறித்து, முன்னறிவிப்பு இன்றியே நடத்தப்படுகின்றன. இதனால், மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படவேண்டும் என்கிற நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமே அடிபட்டுப்போய்விடுகிறது. ஒவ்வொரு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும், முன்னறிவிப்பு செய்து, முறையாக நடத்தவேண்டும். அனைத்து ஆர்.டி.ஓ., மற்றும் தாலுகா அலுவலகங்களிலும், புரோக்கர் தலையீடு தவிர்க்கப்படவேண்டும்.






      Dinamalar
      Follow us