/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சகோதரர்களை கொல்ல முயன்ற கும்பல் எது?
/
சகோதரர்களை கொல்ல முயன்ற கும்பல் எது?
ADDED : பிப் 08, 2025 11:35 PM
திருப்பூர் : குண்டடம் அருகே சகோதரர்களை கொல்ல முயன்ற கும்பலை கண்டறிய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
திண்டுக்கல் மாவட்டம், குட்டப்பாறையை சேர்ந்தவர் அசோக்குமார், 31, சந்திரசேகர், 29. சகோதரர்களான, இவர்கள், நாகராஜ் என்பவரை சில ஆண்டு முன் கொலை செய்தனர். வழக்கு விசாரணை திண்டுக்கல் மாவட்ட கோர்ட்டில் நடந்து வருகிறது. சகோதரர்கள் தற்போது, திருப்பூர் கோவில் வழியில் தங்கியுள்ளனர்.
நேற்று முன்தினம் சகோதரர்கள், தனது நண்பரான, 17 வயது சிறுவனை அழைத்து கொண்டு டூவீலரில் விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜராக சென்றனர்.அப்போது, குண்டடம், இடையன்கிணறு அருகே சென்ற போது, பின்னால் வந்த கார் டூவீலர் மீது மோதியது.
காரிலிருந்து கும்பல், அந்த கொலைக்கு பழி தீர்க்க கத்தியுடன் துரத்தினர். காயத்துடன் தப்பிய, மூவரும் போலீசாருக்கு தகவல் அளித்து விட்டு, திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காரில் மோதி கும்பல் ஒன்று கொலை முயற்சியில் ஈடுபட்டது தொடர்பாக குண்டடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
போலீசார் கூறுகையில், ''முதல்கட்டமாக, அந்த காரில் வந்த கும்பல் குறித்து, மூன்று பேருக்கு தெரியவில்லை. இவர்களை பின்தொடர்ந்து வந்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடக்கிறது.
சம்பந்தப்பட்டவர்களை பிடிக்க, நான்கு தனிப்படை அமைக்கப்பட்டு, மொபைல் போன் டவர், 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகிறோம்'' என்றனர்.