தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அடுத்த தீபாவளி எப்ப வருமோ!

அடுத்த தீபாவளி எப்ப வருமோ!

அடுத்த தீபாவளி எப்ப வருமோ!


ADDED : நவ 01, 2024 12:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 01, 2024 12:55 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சூப்பரா இருந்துச்சு


தேவஸ்ரீ:

எஸ்.ஆர்., நகர்ல நாங்க இருக்கிறோம். பர்ஸ்ட் ஸ்டேண்டர்டு படிக்கிறேன்... தீபாவளிக்கு புது டிரஸ் போட்டேன். அப்பா, பட்டாசு நிறைய வாங்கித்தந்தாங்க... மத்தாப்பு, புஸ்வாணம், சங்குச்சக்கரம் எல்லாம் கொளுத்துனேன்... எவ்ளோ சூப்பரா இருந்துச்சு தெரியுமா? அம்மா செஞ்ச வடை, அதிரசம் எல்லாம் செம டேஸ்ட். என் பிரண்ட்ஸூக்கும் கொடுத்தேன். சந்தோஷமா இருந்துச்சு... அடுத்த தீபாவளி எப்ப வருமோ!

பிரண்ட்ேஸாட சந்தோஷம்


பிரேம்குமார்:

கோல்டன் நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில 6ம் வகுப்பு படிக்கிறேன். சிலம்பமும் கத்துக்கிறேன். என்னோட சிலம்பம் படிக்கிற நிறைய பசங்க வெளியூர்க்காரங்களா இருக்கிறதால, முன்கூட்டியே அவங்க ஊருக்கு கிளம்பிட்டாங்க. அதனால அவங்க ஊருக்கு போறதுக்கு முன்னாடியே அவங்களோட சேர்ந்து தீபாவளியை பட்டாசு வெடிச்சும், இனிப்பு பரிமாறியும் கொண்டாடினோம். நண்பர்களோட சேர்ந்து பண்டிகை கொண்டாடுறது, ரொம்ப சந்தோஷமா இருக்கு.

---

அக்காவோட கொண்டாட்டம்


இளன்:

ஆண்டிபாளையத்தில அப்பா, அம்மாவோட வசிக்கிறேன். திருப்பூர் ஸ்கூல்ல 6ம் வகுப்பு படிக்கிறேன். அக்கா கிரித்தி ஊட்டில எட்டாம் வகுப்பு படிக்கிறாங்க.. தீபாவளிக்கு எனக்கு மட்டுமில்ல... அக்காவுக்கும் 5 நாள் லீவு விட்டிருக்காங்க. அக்கா ஹாஸ்டலில் இருப்பதால் இது போல் பண்டிகைக்கு வந்தால் தான் என்னுடன் விளையாட முடியும்.தீபாவளிக்கு புது டிரஸ், பட்டாசு வெடியெல்லாம் அப்பா வாங்கி கொடுத்தார். வீட்டில் அம்மா நெறைய பலகாரம் செஞ்சு, வெரைட்டியா கொடுத்தாங்க... செமத்தியா இருந்துச்சு... தீபாவளி ஒரு நாள்னாலும் எங்களுக்கு அஞ்சு நாளும் ேஹப்பி தீபாவளி தான். சுற்றுச்சூழல் எந்த வகையிலும் கெட்டுப் போகாம நம்ம செலிபரசேன் இருக்கணும்.

---

பகிர்ந்து வாழ்ந்தா நல்லது


யுதேஷ்வரன்: நான், கோல்டன் நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில மூணாம் வகுப்பு படிக்கிறேன். புது டிரஸ் போடும்போது அவ்ளோ சந்தோஷமா இருந்துச்சு. பலகாரம் சூப்பர் ருசி; பட்டாசு வாங்கி பிரண்ட்ேஸாட சேர்ந்து வெடிச்சேன். அவ்ளோ உற்சாகமா இருந்துச்சு. எல்லார்ட்டயும் அன்பா இருக்கணும்; இருப்பதை பகிர்ந்து வாழணும்ங்கற விஷயத்தை பெரியவங்க சொல்லிக் கொடுத்தாங்க.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us