/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கண்டதும்.. காணாததும்! ரூ.12 கோடி ஒதுக்கீடு
/
கண்டதும்.. காணாததும்! ரூ.12 கோடி ஒதுக்கீடு
ADDED : நவ 14, 2024 11:27 PM
திருப்பூர் ; நீண்ட நாட்களாக பராமரிப்பில் இல்லாத, உடனடியாக உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டிய பள்ளிகள் விபரம் மாவட்ட வாரியாக சேகரிக்கப்பட்டு, மாநிலம் முழுதும், 440 அரசு பள்ளிகளுக்கு, 745 கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, 13 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி கட்டமைப்புக்கு, 12.48 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, ஒப்புதலும் வழங்கப்பட்டுள்ளது.
கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'எந்தெந்த பள்ளிகளில், கூடுதல் வகுப்பறை, ஆய்வகம், கழிப்பிடம், கட்ட வேண்டியுள்ளது. குடிநீர் விஸ்தரிப்பு, சுற்றுச்சுவர் மற்றும் பள்ளியில் ஏற்படுத்தி தர வேண்டிய பிற வசதிகள் என்ன என்பது குறித்து பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போது மழை காலம் என்பதால், உடனடியாக முடிக்க வேண்டிய பணிகளுக்கு முக்கியத்துவம் தரப்பட உள்ளது,' என்றனர்.