ADDED : ஜன 08, 2024 01:38 AM
வாழ்வாதாரமாகவும், விதையாகவும் வாழ்வோம்
விளை நெல் வாழ்வாதாரமாகும்; அடுத்த விதைப்புக்கு விதை நெல்லுமாக இருக்கும்.
உழவர்கள் தாம் உழைத்துப் பாடுபட்ட பொருளையெல்லாம், துன்பத்தில் உழலும் இயலாத வறியவர்க்குப் பகிர்ந்து கொடுப்பதாலும், இல்லாதவர்கள், இயலாதவர்கள் அனைவருக்கும் வாழ்வாதாரம் தரும் வழி பிறப்பதாலும்தான் 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்ற பழமொழி பிறந்தது.
மகாகவி பாரதியாரோ, 'உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்' என்கிறார்.
'வளம்பெற வழக்கமான யுத்திகள் போதாது'
-----------------------------------
'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்ற நம்பிக்கையுடன், பின்னலாடை தொழில்துறையினர் உள்ளனர்.
தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்க (சைமா) தலைவர் ஈஸ்வரன்:
பல்வேறு சிரமங்களை சுமந்தபடி, பின்னலாடைகளை உற்பத்தி செய்தாலும், அதற்கு பிறகு விற்பனை செய்வதில் பல்வேறு சவால்கள் நீடிக்கின்றன. வெளிநாட்டு நிறுவனங்கள், இந்தியாவின் அனைத்து உள்நாட்டு சந்தைகளிலும் தங்கள் பொருட்களை விற்கின்றன.
இந்தியாவில் உற்பத்தியாகும் பொருள், அனைத்து மாநிலங்களுக்கும் செல்வதில்லை. மத்திய, மாநில அரசுகள் உதவியுடன், உற்பத்தியாகும் பொருட்களை உள்நாட்டிலேயே அதிக அளவு விற்பனை செய்யும் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன்:
'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்பது, திருப்பூர் பின்னலாடை தொழிலுக்கு நன்றாக பொருந்தியுள்ளது. அதற்கு பிறகே, கோடைக்கால ஆர்டர் வரத்து உறுதியாகும். வழக்கமான பருத்தி நுாலிழை பின்னலாடை உற்பத்தியை மட்டும் தொடராமல், மறுசுழற்சி, செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தி வாயிலாக, மதிப்பு கூட்டப்பட்ட ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு, ஒட்டுமொத்த திருப்பூரும் தயாராக வேண்டும்; அதற்கான முயற்சிகளை, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் மேற்கொண்டு வருகிறது.
----
மூவரின் படம் வைக்கவும்