தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றுவது எப்போது?

நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றுவது எப்போது?

நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றுவது எப்போது?


ADDED : ஆக 07, 2025 09:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 07, 2025 09:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை; உடுமலை, ஒன்றிய அலுவலக பஸ் ஸ்டாப்பில், நிழற்கூரை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உடுமலை, எஸ்.என்.ஆர்., லே அவுட் அருகே ஒன்றிய அலுவலகம் அமைந்துள்ளது. தற்போது ஒன்றிய அலுவலக கட்டடம் புதிதாக கட்டப்பட்டு வருகிறது.

இருப்பினும் அங்குள்ள குடியிருப்பு பகுதிக்கு வருவோர் மேம்பாலம் அருகிலுள்ள பஸ் ஸ்டாப்பை பயன்படுத்துகின்றனர். பஸ் ஸ்டாப்பில் நிழற்கூரை இல்லை.

இதனால், பயணிகள் மரநிழலிலும், அருகிலுள்ள கடைகளின் வாசல்களிலும் காத்திருக்கின்றனர். மழை, வெயில் காலங்களில், பஸ் ஸ்டாப்பில் காத்திருக்க முடியாமல் தவிக்கின்றனர்.

பயணியர் அதிக எண்ணிக்கையில் இருப்பினும், இதுவரை அடிப்படையான நிழற்கூரை வசதி இல்லாததால் வேதனைக்குள்ளாகின்றனர். முதியோர், குழந்தைகள் பெரிதும் பாதிக்கின்றனர்.

பயணிகளின் அடிப்படை வசதிக்கு, நிழற்கூரை அமைக்க நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us