/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புதர் மண்டிய கிளை கால்வாய் பராமரிப்பு பணிகள் எப்போது?
/
புதர் மண்டிய கிளை கால்வாய் பராமரிப்பு பணிகள் எப்போது?
புதர் மண்டிய கிளை கால்வாய் பராமரிப்பு பணிகள் எப்போது?
புதர் மண்டிய கிளை கால்வாய் பராமரிப்பு பணிகள் எப்போது?
ADDED : டிச 09, 2024 10:35 PM

உடுமலை; மூன்றாம் மண்டல பாசனத்தில் தண்ணீர் திறக்கப்பட உள்ள, பூலாங்கிணறு கிளை கால்வாய் பராமரிப்பின்றி புதர் மண்டி காணப்படுகிறது.
உடுமலை அருகே திருமூர்த்தி அணையிலிருந்து, பி.ஏ.பி., நான்கு மண்டல பாசனத்துக்கு சுழற்சி முறையில், தண்ணீர் வழங்கப்படுகிறது. பிரதான கால்வாயில் இருந்து கிளை கால்வாய் வாயிலாக விளைநிலங்களுக்கு தண்ணீர் செல்கிறது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலுள்ள இந்த கால்வாய்கள் நீண்ட காலமாக புதுப்பிக்கப்படாமல் உள்ளது. இதனால், பல இடங்களில் நீர் விரயம் ஏற்படுகிறது; கடைமடைக்கு தண்ணீர் செல்வதில் பாதிப்பு தொடர்கதையாக உள்ளது.
மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறக்கும் முன் பொதுப்பணித்துறை சார்பில், அவசர கதியில் பராமரிப்பு பணிகள் மட்டும் மேற்கொள்ளப்படுகிறது. இப்பணிகளால் எவ்வித பலனும் இல்லை.
உதாரணமாக, மூன்றாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் பூலாங்கிணறு கிளை கால்வாய் புதர் மண்டி பரிதாப நிலையில் உள்ளது.
இக்கால்வாய் பல இடங்களில், சேதமடைந்துள்ளதால், பாசன காலத்துக்கு முன்பாகவே பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள, விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், பொதுப்பணித்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.