/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பொலிவிழந்த மேம்பாலத்தின் துாண்கள் பராமரிப்பு எப்போது?
/
பொலிவிழந்த மேம்பாலத்தின் துாண்கள் பராமரிப்பு எப்போது?
பொலிவிழந்த மேம்பாலத்தின் துாண்கள் பராமரிப்பு எப்போது?
பொலிவிழந்த மேம்பாலத்தின் துாண்கள் பராமரிப்பு எப்போது?
ADDED : செப் 10, 2025 09:49 PM

உடுமலை ; தளி ரோடு மேம்பாலத்தின் துாண்களை ஆய்வு செய்து, நெஞ்சாலைத்துறையினர் அடிப்படை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
உடுமலை - தளி ரோடு வழியாக, திருமூர்த்திமலை, அமராவதி அணை, சின்னார், மறையூர், மூணார் பகுதிகளுக்கு பஸ்கள், சுற்றுலா வாகனங்கள் அதிக அளவில் செல்கின்றன. இதனால், இந்த ரோட்டில் போக்குவரத்து அதிகமிருந்தது. அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.
இதற்கு தீர்வு காணும் வகையில், உடுமலை - தளி ரோட்டில், நகராட்சி அலுவலகம் அருகே ரயில்வே கடவு பகுதியில், கடந்த 2009ல் மேம்பாலம் கட்டும் பணி துவங்கியது. ரூ.19 கோடி மதிப்பீட்டில், 26 தூண்களுடன், 650 மீட்டர் நீளம், 7.5 மீட்டர் அகலத்தில் பாலம் கட்டப்படுகிறது.
பாலத்தின் இரு பக்கமும் சர்வீஸ் ரோடும் அமைக்கப்பட்டுள்ளது. கட்டுமான பணிகளின் போது ஏற்பட்ட குளறுபடியால், பாலம் பயன்பாட்டுக்கு வர தாமதம் ஆனது.
பயன்பாட்டுக்கு வந்த சில ஆண்டுகளில், ஓடுதளத்தில் கம்பிகள் வெளியே தெரிவது உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டன.
தற்போது, பாலத்தின் கீழ் பகுதியில், துாண்கள் பொலிவிழந்து பரிதாப நிலையில் காணப்படுகிறது.
துாண்களையொட்டி, குப்பையை குவித்து தீ வைத்து எரிப்பது உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். ஓடுதளத்தில் இருந்து சில கசிவுகள் வாயிலாக, துாண்களில், மழை நீர் தேங்குகிறது.
பொலிவு இல்லாமல் காணப்படும் மேம்பால துாண்கள் குறித்து நெடுஞ்சாலைத்துறையினர் ஆய்வு செய்து, பராமரிப்பு செய்ய வேண்டும், சமூக விரோத செயல்களை தடுக்கும் வகையில், துாண்களுக்கு வர்ணம் பூசி, எச்சரிக்கை வாசகங்களை எழுதுவதுடன், கம்பித்தடுப்பும் அமைக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.