/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கட்டப்படும் சேமிப்பு கிடங்கு பயன்பாட்டுக்கு வருவது எப்போது?
/
கட்டப்படும் சேமிப்பு கிடங்கு பயன்பாட்டுக்கு வருவது எப்போது?
கட்டப்படும் சேமிப்பு கிடங்கு பயன்பாட்டுக்கு வருவது எப்போது?
கட்டப்படும் சேமிப்பு கிடங்கு பயன்பாட்டுக்கு வருவது எப்போது?
ADDED : ஜூலை 14, 2025 08:13 PM

உடுமலை; போடிபட்டியில் கட்டப்பட்டு வரும் உணவு சேமிப்பு கிடங்கை முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டுவர வலியுறுத்தப்பட்டுள்ளது.
உடுமலை ஒன்றியம் போடிபட்டியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் சார்பில் உணவு தானிய சேமிப்பு கிடங்கு புதிதாக கட்டப்பட்டு வருகிறது.
இந்த கட்டடம், 10 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் ஜூன் மாதம் முதல் கட்டப்பட்டு வருகிறது. அரசுத்துறைகள் பயன்படுத்துவதற்கென கட்டப்படும் இதுபோன்ற கட்டடங்கள் பல இடங்களில் வீணாகி பயன்பாடில்லாமல் உள்ளது.
கண்ணம்மநாயக்கனுார் ஊராட்சியில் உள்ள இதுபோன்ற தானிய சேமிப்பு கிடங்கு, பல ஆண்டுகளாக பயன்பாடில்லாமல் பூட்டிய நிலையில் உள்ளது. பூட்டிய கட்டடங்கள் இரவு நேரங்களில் மது அருந்துவோரின் இடமாகவும் மாறிவிடுகிறது. இவ்வாறு இல்லாமல், தற்போது கட்டப்பட்டு வரும் சேமிப்பு கிடங்கை விரைவில் பணிகளை நிறைவு செய்து, முழுமையான பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.