தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தொழிலாளர் தங்க வசதி எப்போது நிறைவேறும்?

 தொழிலாளர் தங்க வசதி எப்போது நிறைவேறும்?

 தொழிலாளர் தங்க வசதி எப்போது நிறைவேறும்?


ADDED : நவ 30, 2025 06:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 30, 2025 06:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தி ருப்பூரில் பின்னலாடை தொழிற்சாலைகளில் பீஹார், ஒடிசா, ஜார்க்கண்ட், மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், ஹரியானா உள்பட பல்வேறு மாநில தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். ஏஜென்ட்கள் மூலம், வெளிமாநில தொழிலாளர் அழைத்து வரப்பட்டனர்; சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் திருப்பூரில் வாழ முடியும் என்பது ஊர்ஜிதமான பிறகு, தொழிலாளர்களே, தங்கள் நண்பர், உறவினர், குடும்ப உறுப்பினர்களை அழைத்துவந்தனர். வடமாநிலங்களுக்கும் திருப்பூருக்குமான உறவு என்பது பிரிக்க முடியாததாக மாறிவிட்டது. வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநில தொழிலாளர் வந்தாலும், திருப்பூரில் பாதுகாப்பாக தங்கியிருக்க போதிய வசதியில்லை.

பாதுகாப்பு இல்லை பெரிய ஏற்றுமதி நிறுவனங்கள், தங்களிடம் வரும் தொழிலாளரை பாதுகாப்பாக தங்க வைத்து, உணவு, இருப்பிட வசதி அளிக்கின்றன. பெரும்பாலான நிறுவனங்களில் அவ்வசதி இல்லை. தொழிலாளர்களே, வெளியே தங்கி பணியாற்ற வேண்டியுள்ளது. குறிப்பாக, பெண் தொழிலாளர்கள் பாதுகாப்பாக தங்க வசதி போதுமான அளவு இல்லை.

பயன்பாடற்ற விடுதி தங்குமிட வசதி உறுதியாக கிடைத்தால், வெளிமாநில தொழிலாளர்களும் பாதுகாப்பாகவும், நம்பிக்கையுடன் தங்கியிருந்து பணியாற்றுவர். திருப்பூரின் தொழிலாளர் தேவைகளும் பூர்த்தியாகும்; தொழிலும் அடுத்தகட்டத்தை நோக்கி வளர்ச்சி பெறும். தமிழக அரசு, தோழி திட்டத்தில் அமைத்த விடுதியும், முறையான பயன்பாடில்லாமல் இருக்கிறது.

உருவான 'சேப்' தொழில்துறையினர் மற்றும் அரசு பங்களிப்புடன், விடுதி வசதியை ஏற்படுத்தலாம் என, பின்னலாடை தொழில்துறையினர் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், இதுதொடர்பாக பலமுறை கோரிக்கை விடுத்தது. அதன் எதிரொலியாக, 'சேப்' என்ற தொழிலாளர் பாதுகாப்பு திட்டம் உருவாகியுள்ளது.

இத்திட்டம் மூலம், மத்திய, மாநில அரசுகள் மற்றும் தொழில்துறையினர் கூட்டமைப்பில், தொழிலாளர் தங்குமிட வசதி செய்ய மானியம் வழங்கப்படுமென அரசு அறிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, மொத்த திட்டமதிப்பீட்டில், 30 சதவீதம் மானியம் வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது. இது, திருப்பூர் போன்ற தொழில் நகரங்களுக்கு போதாது; மானியத்தை 50 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளது. கோரிக்கையை பரிசீலித்து, வழிகாட்டி நெறிமுறையில், விரைவில் நல்ல அறிவிப்பு வெளியாகுமென, அரசு அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us