/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'வந்தே பாரத்' ரயிலில் எப்போது கூடுதல் பெட்டி?
/
'வந்தே பாரத்' ரயிலில் எப்போது கூடுதல் பெட்டி?
ADDED : ஜன 16, 2025 11:28 PM
திருப்பூர்; திருவனந்தபுரம் - காசர்கோடு இடையே வந்தே பாரத் ரயில் (எண்:20634 ) இயக்கப்படுகிறது. ஜன., முதல் வாரத்தில், 20 பெட்டிகளை கொண்டதாக மாற்றப்பட்டுள்ளது. திருநெல்வேலி - சென்னை எழும்பூர் வந்தே பாரத் ரயில் (எண்:20666) பெட்டி எண்ணிக்கை, 8ல் இருந்து, 16 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆனால், கோவை - சென்னை 'வந்தே பாரத்' ரயில் (எண்:20644) பெட்டி அதிகரிக்கப்படாமல் எட்டு என்ற நிலையியே உள்ளது. இதன் பின் இயக்கத்துக்கு வந்த ரயில்களில் பெட்டி எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது.
ரயில்வே உயரதிகாரிகள் தரப்பில், 'கோவையில் வந்தே பாரத் ரயிலில் முன்பதிவு அதிகரித்தால் தான் பெட்டிகள் எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளது. தற்போது வரை முன்பதிவு குறைவாகவே உள்ளது,' என்கின்றனர்.
ரயில் பயணிகள் தரப்பில், 'காலை நேரத்தில் புறப்படும் வந்தே பாரத் ரயிலால் பயன் குறைவு. மதியம் கோவையில் இருந்து புறப்படும் கோவை எக்ஸ்பிரஸ், இரவு புறப்படும் சேரன், நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலுக்குரிய கூட்டம் கூட 'வந்தே பாரத்' இல்லை. கோவை - சென்னை வந்தே பாரத் ரயில் நேரத்தை மாற்றி இரவில் இயக்கினால் பயன் கிடைக்கும்,' என்கின்றனர்.