தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஓட்டுப்பதிவு எந்த நேரத்தில் அதிகமாகும்?

 ஓட்டுப்பதிவு எந்த நேரத்தில் அதிகமாகும்?

 ஓட்டுப்பதிவு எந்த நேரத்தில் அதிகமாகும்?


ADDED : ஏப் 23, 2026 06:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 23, 2026 06:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் தினசரி அதிகரித்து வரும் நிலையில், ஓட்டுப்பதிவு சதவீதம் குறையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மாவட்டத்தில், 36 முதல் 39 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவு ஆவதால், காலை 10:00 மணிக்கு துவங்கும் வெயில், மாலை 4:00 மணியை கடந்த பின்பும் ஓய்வதில்லை. உஷ்ணமும் அதிகமாக உள்ளது.

அதீத வெப்பம் உணரப்படுவதால், இரவில் வீட்டுக்குள் இருக்க முடிவதில்லை. வெயில் கொளுத்துவதால், அத்தியாவசிய தேவை தவிர பிற விஷயங்களுக்கு மக்கள் வெயிலில் வெளியே வருவதில்லை; அதே நேரம், பணி நிமித்தமாக பயணிப்போரின் பயணம் தொடர்கிறது.

இன்று, ஓட்டுப்பதிவு நாள். மழைக்கு வாய்ப்பில்லை. குறைந்தபட்சம் 32 முதல் அதிகபட்சம் 39 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. ஓட்டுப்பதிவு காலை 7:00 மணிக்கு துவங்கி மாலை 6:00 மணி வரை நடக்கிறது.

வெயிலின் தாக்கத்தில், வரிசை நிற்பதை தவிர்க்க, பெரும்பாலானோர் காலை 7:00 முதல் 10:00 மணி வரை ஓட்டளிக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், மாலை 4:00 முதல் 5:00 மணி வரை அதிக பேர் வரலாம் என்பதால், மாலை 5:00 மணிக்கு பின் வரிசையில் நிற்பவர்களுக்கு டோக்கன் கொடுக்க தேர்தல் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

கடந்த 2021 தேர்தலில் திருப்பூர் மாவட்டத்தில் 70.12 சதவீதம் ஓட்டுப்பதிவானது. வெயில் கொளுத்துவதால் காலை 10:00 மணிக்கு முன்போ மாலை 4:00 மணிக்குப் பின்போ ஓட்டுப்போடுவதற்கு வாக்காளர்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us