/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எந்தெந்த ஆடைகள் மனசை ஈர்க்கின்றன?
/
எந்தெந்த ஆடைகள் மனசை ஈர்க்கின்றன?
ADDED : அக் 21, 2024 03:47 AM
திருப்பூர் : தினம், தினம் புதுசு, புதுசாய், தினுசு, தினுசாய் ஆடைகள் வந்து குவியும் நிலையில், மனதுக்கு பிடித்த ஆடையை தேர்வு செய்வதில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, அனைவருக்கும் குழப்பம் ஏற்பட்டாலும், அது 'த்ரில்' அனுபவமாகவும் இருக்கிறது.
ஆடை வர்த்தர்களின் அனுபவம்:
பெரியவர் முதல் குழந்தைகள் வரை குடும்பத்தில் உள்ள அனைவரும், ஒரே நிறத்திலும், ஒரே வித அலங்காரத்திலும் அமைந்த ஆடைகளை உடுத்தும் போக்கு அதிகரித்துள்ளது. ஒரே நிறத்தில் ஆண்களுக்கு 'குர்தா' எனப்படும் மேலாடை, பெண்களுக்கு 'லெஹெங்கா' அல்லது 'லாங் கவுன்' எனப்படும் நெடுஞ்சட்டை வகை ஆடைகளை அதிகம் விரும்புகின்றனர்.
அதே ஆடைகளின் சிறிய வடிவமைப்பு, குழந்தைகளுக்கும் உள்ளது. ழுழு ஆடையிலும் நுால் வேலைப்பாடுகள் கொண்ட'சிக்கென் காரி' குர்தாக்கள், இளைஞர்களின் விருப்ப தேர்வாக இருக்கிறது. பூ அலங்காரம் செய்யப்பட்ட உடைகளை பெண்கள் அதிகம் வாங்குகின்றனர். 'ஆலியா சூட், லெஹெங்கா' ஆடைகளுக்கு, இளம் பெண்கள் மத்தியில் ஒரு மவுசு இருக்கத்தான் செய்கிறது.
'பண்டிகை உடை' என்பது, தனித்துவமாகத் தெரிந்திட வேண்டும் என்ற ஆசையில், 'பளிச்' நிறங்களில், அதிக வேலைப்பாடுகள் கொண்ட ஆடைகளை மக்கள் விரும்புகின்றனர்.ஒவ்வொரு பண்டிகைக்கும் புதுப்புது ஆடைகள் வந்தாலும், பெண்களுக்கு சேலை மீதான விருப்பம் மாறுவதில்லை. பண்டிகை காலத்தில் சேலை உடுத்த வேண்டும் என்ற விருப்பம் பெண்களிடம் மேலோங்கி இருக்கிறது. அதே நேரம் பழைய மாடல் சேலைகளை தவிர்த்து, பேன்ஸி ரக சேலைகளை தேர்ந்தெடுத்து வாங்குகின்றனர்.
பட்டுப்புடவை உட்பட 'சாப்ட் சில்க்' எனப்படும் மென்மையான சேலை, ரா சில்க், டிஷ்யு, கோட்டா சில்க், 'வல்கலம்' எனப்படும் பளபளப்பான 'சாட்டின்' போன்ற துணியிலான 'பனாரஸ்' சேலை, பாந்தினி, போச்சம்பள்ளி, மைசூர் சில்க், கலம்காரி என பட்டியல் நீள்கிறது. வீடுகளில் உள்ள பெரியவர்கள் பெரும்பாலும், வேட்டி, சட்டை, அதிக வேலை பாடில்லாத மென்மையான பட்டு சேலை, பருத்தி வகை சேலைகளை வாங்குகின்றனர்.