ADDED : பிப் 12, 2024 12:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
-திருப்பூர் ஒன்றியம், கணக்கம்பாளையம் ஊராட்சி, அய்யம்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 200 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
தமிழ் மற்றும் ஆங்கில வழியில் வகுப்புகள் நடக்கின்றன. மூன்று வகுப்பறைகள் மட்டுமே உள்ளன. ஒவ்வொரு வகுப்பறையிலும் இரண்டு வகுப்பு மாணவர்கள் சேர்ந்து, அமர்ந்து படிக்கின்றனர். மீதமுள்ள வகுப்பு மாணவர்கள் வராண்டாவில் அமர்ந்து படிக்கின்றனர். உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 41.25 லட்சம் ரூபாய் மதிப்பில் கூடுதலாக இரண்டு வகுப்பறை கட்டப்பட்டது. கூடுதல் வகுப்பறை கட்டட பணி முடிந்து பல நாட்கள் ஆகியும் திறக்கப்படவில்லை. யாருக்காக, திறக்கப்படாமல் இக்கட்டடம் காத்திருக்கிறதோ!