நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; ஊத்துக்குளி - திருப்பூர் ரயில் வழித்தடத்தில், கூலிபாளையம் ரயில்வே ஸ்டேஷன் அருகே, 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரயில் தண்டவாளத்தில் இறந்து கிடந்தார்.
நிகழ்விடத்துக்கு சென்ற எஸ்.ஐ., விஜயகுமார், பிரேதத்தை கைப்பற்றி, உடற்கூறாய்வுக்கு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தார். இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், ரயிலில் வந்தவர் தவறி விழுந்தாரா, தண்டவாளத்தை கடக்க முயன்றவரா என ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

