/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இறந்த பெண் யார்? போலீசார் திணறல்
/
இறந்த பெண் யார்? போலீசார் திணறல்
ADDED : ஜன 18, 2024 01:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : ரயிலில் அடிபட்டு இறந்த இளம் பெண் யார் என்பதை கண்டறிய முடியவில்லை.
கடந்த, 15ம் தேதி, ரயில்வே ஸ்டேஷன் கூட்ஸ்ெஷட் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற, 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண், ரயில்மோதி பலியாகினார். ரயிலின் வேகத்தால் முகம் சிதைந்ததுடன், கை, கால் தனித்தனியே துண்டானது.
சடலத்தை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 2 நாளாக விசாரணை நடத்தியும், இறந்த பெண் யாரென கண்டறிய முடியவில்லை. உடலை அடக்கம் செய்ய வழியின்றி, ரயில்வே போலீசார் திணறுகின்றனர்.