/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாவட்ட தலைவர் யார்? காங்., கட்சியில் போட்டி
/
மாவட்ட தலைவர் யார்? காங்., கட்சியில் போட்டி
ADDED : ஜூன் 25, 2025 11:41 PM
பல்லடம்; திருப்பூர் வடக்கு மாவட்ட காங்., தலைவர் பதவி தற்போது காலியாக உள்ளது. மாவட்ட தலைவராக இருந்த கோபிநாத் பழநியப்பன், தேசிய பொதுச்செயலாளர் பதவியைப் பெற்றார்.
அடுத்த மாவட்டத் தலைவர் யார் என்ற கேள்வி எழுந்தது. இதற்கு, பலரும் போட்டி போட்டு வருவதால், தலைவரை தேர்வு செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது.
திருப்பூர் வடக்கு மாவட்ட காங்., கட்சியின் கீழ், பல்லடம், அவிநாசி, காங்கயம் சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு, காங்., கட்சி நிர்வாகிகள் இரண்டு அணிகளாக பிரிந்துள்ளனர். சமீபத்தில், பல்லடம் அருகே நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகையை, இரு அணியினரும் தனித்தனியாக நின்று வரவேற்பு அளித்தது குறிப்பிடத்தக்கது.
வடக்கு மாவட்ட தலைவர் பதவியை கைப்பற்றியாக வேண்டும் என்ற முனைப்பில், இரு அணி நிர்வாகிகள், சென்னைக்கும், டெல்லிக்கும் படையெடுத்து வருகின்றனர். இரு அணியினரும் மாறி மாறி தலைமைக்கு புகார் மனு அளித்து வருகின்றனர்.
இதற்கிடையில், சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், 6 பேர் மாவட்டத் தலைவர் பதவியை கைப்பற்ற போட்டி போட்டு வருகின்றனர்.