தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/தாராபுரத்தில் வெல்லப்போவது யார்?

தாராபுரத்தில் வெல்லப்போவது யார்?

தாராபுரத்தில் வெல்லப்போவது யார்?


UPDATED : அக் 05, 2026 12:00 AM

ADDED : அக் 04, 2026 08:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 05, 2026 12:00 AM ADDED : அக் 04, 2026 08:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: தாராபுரம் இடைத்தேர்தல் நாளை நடக்கிறது. 2.23 லட்சம் வாக்காளர்கள், யார் வெற்றிபெறுவர் என்பதைத் தீர்மானிப்பர்.

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு நாளை நடைபெறுகிறது. தொகுதியில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 285 ஆண்கள், 1 லட்சத்து 16 ஆயிரத்து 13 பெண்கள், 8 திருநங்கைகள் என மொத்தம் 2 லட்சத்து 23 ஆயிரத்து 306 வாக்காளர்கள் ஓட்டளிக்க தகுதி பெற்றுள்ளனர்.

தாராபுரம் தொகுதியில் த.வெ.க. சார்பில் சத்தியபாமா, தி.மு.க. சார்பில் சுகன்யா, அ.தி.மு.க. சார்பில் பானுமதி, இந்திய கம்யூ. சார்பில் லட்சுமணன், நா.த. சார்பில் கார்த்திகா உள்ளிட்ட 22 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியானதை தொடர்ந்து, கடந்த செப். 22, 23-ம் தேதிகளில் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் ஓட்டு பதிவு நடைபெற்றது. இதில் 1,201 பேர் வாக்களித்தனர். இதையடுத்து, அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். த.வெ.க. தலைவர் விஜய், தி.மு.க. தலைவர் ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பழனிசாமி ஆகியோர் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ரோடு ஷோ நடத்தினர். தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது.

நாளை காலை 7:00 முதல் மாலை 6:00 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. தொகுதியில் 186 மையங்களில் அமைக்கப்பட்டுள்ள 320 ஓட்டுச்சாவடிகளில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மூலம் வாக்குப்பதிவு நடைபெறும். காலை 5:30 மணிக்கு மாதிரி ஓட்டுப்பதிவு நடைபெறும்.

தொகுதியில் 22 வேட்பாளர்கள் போட்டியிடுவதால், ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் 2 பேலட் யூனிட்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதற்காக கூடுதல் இருப்புடன் 768 பேலட் யூனிட்கள், 384 கன்ட்ரோல் யூனிட்கள், 416 வி.வி.பேட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பேலட் யூனிட்களில் வேட்பாளர்களின் பெயர், புகைப்படம், கட்சி சின்னம் இடம்பெற்ற பேலட் ஷீட்கள் பொருத்தப்பட்டு, ஸ்ட்ராங் ரூமில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

இன்று மாலை மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மண்டல அலுவலர்கள் மூலம் அந்தந்த ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.

வாக்காளர்கள் ஓட்டளிக்கும்போது, வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆதார் அட்டை, பணி அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி கணக்கு புத்தகம், தபால் கணக்கு புத்தகம், மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், பான் கார்டு, பாஸ்போர்ட், ஓய்வூதிய ஆவணம், எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான அடையாள அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை உள்ளிட்ட 12 வகையான ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை அடையாள ஆவணமாக பயன்படுத்தி வாக்களிக்கலாம்.

ஓட்டுப்பதிவு முடிந்ததும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன், ஓட்டு எண்ணிக்கை மையமான எல்.ஆர்.ஜி. கல்லுாரிக்கு கொண்டு செல்லப்பட்டு, ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்படும். வரும் 9-ம் தேதி ஸ்ட்ராங் ரூம் திறக்கப்பட்டு, ஓட்டு எண்ணிக்கை நடைபெறும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us