/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோப்பை வெல்வது யார்: திருப்பூர் - சென்னை 'பலப்பரீட்சை'
/
கோப்பை வெல்வது யார்: திருப்பூர் - சென்னை 'பலப்பரீட்சை'
கோப்பை வெல்வது யார்: திருப்பூர் - சென்னை 'பலப்பரீட்சை'
கோப்பை வெல்வது யார்: திருப்பூர் - சென்னை 'பலப்பரீட்சை'
ADDED : ஜன 20, 2024 02:40 AM

திருப்பூர்;கடப்பா அணிக்கு எதிரான போட்டியில், திருப்பூர் ஸ்கூல் ஆப் கிரிக்கெட் அணி ஆறு ஓவர், மீதமிருக்க, 24 ஓவரில், 150 ரன் என்ற வெற்றி இலக்கை அடைந்து, இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
டி.எஸ்.சி., சேலஞ்சர் டிராபி கோப்பை கிரிக்கெட் போட்டியில், நேற்று நடந்த முதல் அரையிறுதி போட்டியில், டாஸ் வென்ற திருப்பூர் ஸ்கூல் ஆப் கிரிக்கெட் அணி, பவுலிங் தேர்வு செய்தது. பேட்டிங் செய்த, கடப்பா, ஓய்.எஸ்.ஆர்., கிரிக்கெட் அசோசியேஷன் அணி, 29.3 ஓவரில், பத்து விக்கெட் இழப்புக்கு, 149 ரன் எடுத்தது.
தொடர்ந்து, 180 பந்துகளில், 150 ரன் என்ற இலக்கை விரட்டிய, ஸ்கூல் ஆப் கிரிக்கெட் அணியை, பேட்ஸ்மேன்கள், பிரகாஷ்ராஜ், 63 ரன், அமித், 44 ரன் வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர். ஆறு ஓவர் மீதமிருக்க, 24 ஓவர் நிறைவில், நான்கு விக்கெட்டுகளை இழந்து, 150 ரன் எடுத்து, திருப்பூர் ஸ்கூல் ஆப் கிரிக்கெட் அணி முதல் ஆளாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. 63 ரன் எடுத்த, பிரகாஷ்ராஜ், ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
ஆல்ரவுண்டர் சுஜித்ராஜ்
மதியம் நடந்த இரண்டாவது அரையிறுதி போட்டியில், டாஸ் வென்ற சென்னை டான்போஸ்கோ அணி, 30 ஓவரில், ஏழு விக்கெட் இழப்புக்கு, 154 ரன் எடுத்தது. இலக்கை விரட்டிய ைஹதராபாத் கோச்சிங் பியாண்ட் அணி, 27.4 ஓவரில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 133 ரன் எடுத்து, 'ஆல்அவுட்'டானது. 21 ரன் வித்தியாசத்தில் சென்னை டான்போஸ்கோ அணி வெற்றி பெற்றது.
பேட்டிங்கில், 48 ரன் அடித்து மிரட்டிய சுஜித்ராஜ். நான்கு ஓவர்கள் வீசி, 15 ரன் மட்டும் கொடுத்து, மூன்று விக்கெட் கைப்பற்றி அசத்தினர். அணியின் வெற்றிக்கு பங்காற்றிய, இவரே ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
கோப்பை யாருக்கு?
கிரிக்கெட் தொடர் துவக்கம் முதலே அசத்திய, திருப்பூர் ஸ்கூல் ஆப் கிரிக்கெட் அணியும், லீக் போட்டிகளில் தொடர் வெற்றி கண்ட சென்னை டான்போஸ்கோ அணியும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இன்று இரு அணிகளும் மோதுகிறது. 2024 டி.எஸ்.சி., சேலஞ்சர் டிராபி கோப்பையை கைப்பற்ற போவது யார் என்பது இன்று தெரியும்.