/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முழுமை பெறாத திட்டத்துக்கு கட்டணம் எதற்கு வசூலிக்கணும்! திடக்கழிவு திட்டத்தில் 'சர்ச்சை'

ADDED : நவ 02, 2024 11:09 PM
திருப்பூர்: திடக்கழிவு மேலா ண்மை திட்டத்துக்கென, பொதுமக்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், திட்டம் முழுமை பெறாமல் இருப்பது, மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
இது குறித்து, உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க (சி.ஐ.டி.யு.,) திருமுருகன்பூண்டி நகராட்சி கிளை தலைவர் சுப்ரமணியம் கூறியதாவது:
திருமுருகன்பூண்டி நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிக்கென, ஒவ்வொரு வீட்டுக்கும், 15 ரூபாய் கட்டணம் வசூலிக்கப் படுகிறது.
ஆனால், குப்பை சேகரிக்கும் பணி செய்யும் தனியார் நிறுவனத்தினர், குப்பையை சேகரித்து, குப்பை கொட்டும் இடத்தில் கொட்டி விடுகின்றனர். அதோடு அவர்களது பணி நிறைவு பெறுகிறது.
குப்பையை தரம் பிரிப்பது, உரம் தயாரிப்பது, மறு சுழற்சிக்கு மக்காத குப்பைகளை அனுப்பி வைப்பது போன்ற பணிகளில் அவர்கள் ஈடுபடுவதில்லை. திருப்பூர் மாநகராட்சியில் குப்பைக் கொட்டவே இடமில்லாமல், மாநகராட்சி நிர்வாகத்தினர், பாறைக்குழிகளை தேடி வருகின்றனர். ஆனால், திடக்கழிவு மேலாண்மை பணிக்கென மக்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
முழுமைப் பெறாத ஒரு திட்டத்துக்கு மக்களிடம் இருந்து கட்டணம் வசூலிப்பது ஏற்புடையது இல்லை; திடக்கழிவு மேலாண்மை திட்டம் முழுமைப் பெறாமல் இருப்பது, திட்டத்தின் தோல்வி என்றுதான் சொல்ல வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.