/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சொத்து வரி குறைக்கப்படாதது ஏன்? கேள்வி கேட்டு அ.தி.மு.க., வெளிநடப்பு
/
சொத்து வரி குறைக்கப்படாதது ஏன்? கேள்வி கேட்டு அ.தி.மு.க., வெளிநடப்பு
சொத்து வரி குறைக்கப்படாதது ஏன்? கேள்வி கேட்டு அ.தி.மு.க., வெளிநடப்பு
சொத்து வரி குறைக்கப்படாதது ஏன்? கேள்வி கேட்டு அ.தி.மு.க., வெளிநடப்பு
ADDED : மார் 29, 2025 05:49 AM

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் நேற்று நடந்த பட்ஜெட் தாக்கலில், சொத்து வரி உயர்வை ரத்து செய்வது எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதனை கண்டித்து அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., கவுன்சிலர்கள் வெளி நடப்பு செய்தனர்.
திருப்பூர் மாநகராட்சியில் நேற்று 2025-26 ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் ெசய்யப்பட்டது. இதன் மீதான விவாதத்தில் அ.தி.மு.க., குழு தலைவர் அன்பகம் திருப்பதி பேசியதாவது:
மாநகராட்சி கூட்டத்தில், 2வது பெரிய கட்சியான அ.தி.மு.க.,வுக்கு முன்னுரிமை அளித்து பேச வாய்ப்பளிக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். கூட்டணி கட்சிகள் பேசி முடித்த பின்னரே வாய்ப்பு வழங்கப்படுகிறது. பட்ஜெட் தொடர்பான கருத்து கேட்டு பொதுமக்களுக்கு உரிய கால அவகாசம் வழங்க வேண்டும்.
அதேபோல் பட்ஜெட் மீதான விவாதம் நடத்தவும் தனியாக நேரம் ஒதுக்க வேண்டும். துாய்மை பணியாளர் வாரிசுகளுக்கு பணி வழங்க வேண்டும். தெரு விளக்குகளுக்கு 'கியூஆர்' கோடு வழங்கும் திட்டம் முழுமை பெறாமல் உள்ளது. 'கியூஆர்' கோடு எழுதிய இடத்தில் விளம்பர நோட்டீஸ் ஒட்டப்படுகிறது. வரி விதிப்பு விடுபட்ட கட்டடங்களில் அளவீடு செய்வது குறித்து தனிக்குழு அமைக்க வேண்டும். பள்ளிகளில் கூடுதலாக துாய்மைப் பணியாளர் நியமிக்க வேண்டும்.
எங்கு பார்த்தாலும் தெரு நாய்கள் தொல்லை அதிகமாகி விட்டது. 20 நாய்கள் உள்ள தெருவில் 2 நாய்களை மட்டுமே பிடிக்கின்றனர். கூடுதல் நிதி ஒதுக்கி இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். வரியினங்களை உயர்த்தி விட்டு உபரி பட்ஜெட் என்று மகிழ்ச்சியடைய முடியாது. அப்ரூவல் உள்ளிட்ட கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது. மாநகராட்சியில் உள்ள கடன் எவ்வளவு, வட்டி என்ன செலுத்தப்படுகிறது என்று தெளிவாக தெரிவிக்க வேண்டும். சொத்து வரி குறைப்பது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
அதன்பின், அன்பகம் திருப்பதி தலைமையில், அ.தி.மு.க., கவுன்சிலர்கள் அனைவரும் வெளி நடப்பு செய்தனர்.
வரியினங்களை உயர்த்தி விட்டு உபரி பட்ஜெட் என்று மகிழ்ச்சியடைய முடியாது. அப்ரூவல் உள்ளிட்ட பல இனங்களின் கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது. மாநகராட்சிக்கு உள்ள கடன் எவ்வளவு, வட்டி என்ன என்பதை தெரிவிக்க வேண்டும்