/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆன்மிக மாநாட்டில் அரசியல் எதற்கு? ஹிந்து முன்னணி கேள்வி
/
ஆன்மிக மாநாட்டில் அரசியல் எதற்கு? ஹிந்து முன்னணி கேள்வி
ஆன்மிக மாநாட்டில் அரசியல் எதற்கு? ஹிந்து முன்னணி கேள்வி
ஆன்மிக மாநாட்டில் அரசியல் எதற்கு? ஹிந்து முன்னணி கேள்வி
ADDED : ஜூன் 09, 2025 04:11 AM
திருப்பூர்: ஹிந்து முன்னணி நடத்தும் முருக பக்தர்கள் மாநாடு காரணமாக ஹிந்துக்களிடம் ஏற்பட்டுள்ள எழுச்சியைக் கண்டு 'இண்டி' கூட்-டணியில் உள்ள அரசியல் கட்சிகள் பதட்டம் அடைந்துள்ளன என, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரம-ணியம் கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது;வரும், 22-ல் மதுரையில் முருக பக்தர்கள் மாநாடை ஹிந்து முன்-னணி நடத்துகிறது. இதில், லட்சக்கணக்கானோர் ஒன்றிணைந்து கந்த சஷ்டி கவசம் படிக்கவுள்ளனர்.
முருக பக்தர்கள் கந்த சஷ்டி கவசம் படித்து மாநாடு நடத்துவது காங்., கம்யூ., வி.சி.க., கட்சிகளுக்கு அரசியல் மாநாடாக தெரிகி-றது. ஹிந்து முன்னணி நடத்தும் மாநாட்டுக்கு அரசியல் சாயம் பூச வேண்டிய அவசியம் இல்லை. ஹிந்துக்கள் மத்தியில் விழிப்பு-ணர்வு வரும் என்ற பயம்ம் பதட்டம் அவர்களிடம் ஏற்பட்டுள்-ளது. இவர்கள் பேச்சு தற்போது, ஹிந்துக்கள் மத்தியில் ஏற்பட்-டுள்ள விழிப்புணர்வை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது. இவ்-வாறு அதில் கூறியள்ளார்.