sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 இடுவாயில் குப்பை கொட்டியது ஏன்?

/

 இடுவாயில் குப்பை கொட்டியது ஏன்?

 இடுவாயில் குப்பை கொட்டியது ஏன்?

 இடுவாயில் குப்பை கொட்டியது ஏன்?


ADDED : ஜன 20, 2026 08:03 AM

Google News

ADDED : ஜன 20, 2026 08:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்: இடுவாய் கிராமத்தில் குப்பை கொட்டியது அரசின் முட்டாள்தனமான முடிவு என, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் செயல் தலைவர் வெற்றி கண்டனம் தெரிவித்துள்ளார்.

குப்பை விவகாரத்தில் சிறை சென்று திரும்பியவர்களை சந்தித்த போது, அவர் பேசியதாவது:

கிராமத்தை காப்பாற்றியாக வேண்டும் என்ற நோக்கத்தில் அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த கிராம மக்களிடம் பேச்சு நடத்தி தீர்வு காணாமல், ரோட்டுக்குவரவழைத்தது இந்த அரசு.

குப்பைகளை கொட்டி கிராமங்கள் நாசமாக்கப்பட்டதற்கு எத்தனையோ உதாரணம் உள்ளது. அதுபோல், இடுவாய் கிராமமும் ஆகிவிடக்கூடாது என்ற ஒரே நோக்கத்தில் தான் மக்கள் போராடினர்.

நெருப்பெரிச்சல், இச்சிப்பட்டி, முதலிபாளையம், இடுவாய் என, திருப்பூர் நகரின் குப்பைக்காக கிராமங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. இயற்கை சூழ்ந்த இடுவாய் கிராமத்தில் குப்பை கொட்ட எந்த ஒரு முட்டாள்தனமானஅரசும் முடிவெடுக்காது.

ஒருமுறை குப்பை கொட்டி விட்டால், காலம் முழுக்க துர்நாற்றம், சுகாதார சீர்கேடுக்கு இடையில் தான் நாமும், எதிர்கால சந்ததியினரும் வாழ வேண்டும். விவசாய தொழில் நிறைந்த கிராமத்தின் நடுவே குப்பை கிடங்கு அமைத்ததே முதலில் தவறு.

அதனைவிட, அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், பொதுமக்களை மதிக்காமல், காவல்துறையை பயன்படுத்தி அராஜகத்தில் ஈடுபட்டது அதைவிட தவறு. இப்படி எல்லா தவறுகளையும் செய்துவிட்டு, எந்த குற்றமும் செய்யாத அப்பாவி விவசாயிகள், பொதுமக்களை கைது செய்து சிறையில் அடைத்தது தான், இந்த அரசின் மிகப்பெரிய சாதனை. இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us