sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கிராமங்களில் தலைவிரித்தாடும் குடிநீர் தட்டுப்பாடு

/

கிராமங்களில் தலைவிரித்தாடும் குடிநீர் தட்டுப்பாடு

கிராமங்களில் தலைவிரித்தாடும் குடிநீர் தட்டுப்பாடு

கிராமங்களில் தலைவிரித்தாடும் குடிநீர் தட்டுப்பாடு


ADDED : ஏப் 29, 2025 07:04 AM

Google News

ADDED : ஏப் 29, 2025 07:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:

ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், மக்கள் தொகை அடிப்படையில் கூடுதல் குடிநீர் ஒதுக்கீடு செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

கோடை வெயில் கொளுத்தி வருவதால், ஒவ்வொரு வீடுகளிலும் குடிநீர் தேவை அதிகரித்துள்ளது; கடுமையான வெப்பத்தால், உள்ளாட்சி அமைப்புகளின் குடிநீர் வினியோகத்தில் குளறுபடி அதிகரித்துவிட்டது. குறிப்பாக, திருப்பூர் ஒன்றியத்தில் உள்ள, 13 ஊராட்சிகளிலும், குடிநீர் வினியோகத்தில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்கும் கூட்டுக்குடிநீர் திட்டத்தால், கிராமப்புற மக்களுக்கு சுவையான குடிநீர் கிடைக்கும் என்று அறிவித்திருந்தனர்.

கூட்டுக்குடிநீர் திட்டம்செயல்படுத்தியும்...


திருப்பூர் ஒன்றியத்தின் வடக்கே உள்ள, 10 ஊராட்சிகளின், 165 குடியிருப்பு பகுதிகளுக்கு, தனியே கூட்டுக்குடிநீர் திட்டம் தயாரிக்கப்பட்டது. பல்லடம் மற்றும் திருப்பூர் தெற்கு ஒன்றியத்தில், தலா மூன்று ஊராட்சிகள் வீதம், ஆறு ஊராட்சிகளை சேர்ந்த மக்கள் பயன்பெறும் வகையில், மற்றொரு கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இப்பணிகள் நிறைவடைந்து, குடிநீர் வினியோகம் துவங்கியும், கிராமப்புற மக்களின் குடிநீர் தட்டுப்பாடு நீங்கவில்லை.

குடிநீர் வினியோகம்15 நாள் இடைவெளி


மூன்றாவது திட்டத்தில் வழங்கும் தண்ணீர் தரமாக இல்லை என்பதால், கூட்டுக்குடிநீர் திட்டத்தில் மேட்டுப்பாளையம் தண்ணீர் கிடைக்குமென மக்களும் நம்பிக்கையாக இருந்தனர். இருப்பினும், அனைத்து திட்ட தண்ணீரையும் கலந்து வினியோகம் செய்வதால், மக்களுக்கு பவானி ஆற்று நீர் கிடைப்பதில்லை. ஊராட்சி பகுதி மக்களுக்கு, தினமும் 55 லிட்டர் வீதம் குடிநீர் வழங்கப்பட வேண்டும்.

இருப்பினும், தமிழக அரசு உத்தரவு, திருப்பூரில் பின்பற்றப்படுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஊராட்சி பகுதி மக்களுக்கு, வாரம் ஒருமுறை குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்த நிலைமாறி, 10 நாட்கள் முதல், 15 நாட்கள் வரையிலான இடைவெளியில் தான் குடிநீர் வினியோகம் நடக்கிறது.






      Dinamalar
      Follow us