sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கட்டையால் தாக்கி மனைவி கொலை; கணவன் கைது

/

கட்டையால் தாக்கி மனைவி கொலை; கணவன் கைது

கட்டையால் தாக்கி மனைவி கொலை; கணவன் கைது

கட்டையால் தாக்கி மனைவி கொலை; கணவன் கைது


ADDED : ஜன 16, 2026 04:32 AM

Google News

ADDED : ஜன 16, 2026 04:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம்: தாராபுரம் அருகே, மனைவியை கட்டையால் தாக்கி, கணவனே கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்த குண்டடம், கொக்கம்பா-ளையத்தை சேர்ந்தவர் அங்கமுத்து, 34. இவருக்கு பூங்கொடி, 26, என்ற மனைவி, 7 வயது மகன், 3 வயது மகள் உள்ளனர். தனியார் பஸ் கண்டக்டராக வேலை செய்யும் அங்கமுத்து, 9 ஆண்டுக-ளுக்கு முன், பூங்கொடியை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை, 8:00 மணியளவில் கொக்கம்பா-ளையம், வடபருத்தி காட்டு தோட்டத்தில், முகம் சிதைந்த நிலையில் பூங்கொடியின் உடல் கிடந்தது. தகவல் அறித்து சென்ற பூங்கொடியின் கணவர் அங்கமுத்து அழுது புலம்பினார்.இந்நிலையில், பூங்கொடியின் கணவரிடம் குண்டடம் போலீசார் விசாரித்தபோது, முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து நடத்திய விசார-ணையில், குடிபோதையில் பூங்கொடியிடம், அடிக்கடி அங்க-முத்து தகராறு செய்து வந்ததும், நேற்று காலை தகராறு முற்றி-யதில், தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த பூங்கொ-டியை, கோபத்தில் கட்டையால் தாக்கியதில், அவர் ரத்த வெள்-ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தள்ளார். ஆனால் எதுவும் தெரியாதது போல, அழுது நாடகமாடியதும் தெரிந்தது.

இதையடுத்து, அங்கமுத்துவை குண்டடம் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us