/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மனைவி தற்கொலை; கணவனுக்கு 5 ஆண்டு சிறை
/
மனைவி தற்கொலை; கணவனுக்கு 5 ஆண்டு சிறை
ADDED : செப் 20, 2024 05:59 AM

திருப்பூர்: மனைவியை தற்கொலை துாண்டிய கணவருக்கு, 5 ஆண்டு சிறை விதிக்கப்பட்டது.
தாராபுரம், ரெட்டாரவலசு புளியவலசு பகுதியை சேர்ந்தவர், சீனிவாசன், 50. கூலித் தொழிலாளி. இவருக்கும் அவரது மனைவிக்கும், அடிக்கடி சண்டை நடந்து வந்த நிலையில், கடந்த, 2017 ல் நடந்த குடும்ப தகராறில், மனைவி தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார்.
மனைவியின் தற்கொலைக்கு துாண்டிய சீனிவாசனை கைது செய்த மூலனுார் போலீசார், தற்கொலைக்கு துாண்டியதாக அவர் மீது வழக்குப்பதிந்து, கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
வழக்கு விசாரணை, திருப்பூர் மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. தற்கொலைக்கு துாண்டியதாக சீனிவாசனுக்கு ஐந்தாண்டு சிறையும், மனைவியை கொடுமைப் படுத்தியதற்காக, 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து, ஏக காலத்தில் அனுபவிக்க, நீதிபதி ஸ்ரீதர் உத்தரவிட்டார். அரசு தரப்பில் வக்கீல் ஜமீலா பானு ஆஜரானார்.