/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வனவிலங்கு பாதுகாப்பு விழிப்புணர்வு
/
வனவிலங்கு பாதுகாப்பு விழிப்புணர்வு
ADDED : டிச 05, 2024 06:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வனத்துறை, ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வனச்சரகம், சிக்கண்ணா கல்லுாரி, நாட்டு நலப்பணித்திட்டம் அலகு - 2 சார்பில், எஸ்.பெரியபாளையம், நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்தில், உலக வனவிலங்கு பாதுகாப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார்.
வனவர் வெங்கடாசலம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மாணவ, மாணவியர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். வனக் காப்பாளர் சீனிவாசன், வனச்சரக அலுவலர் சுரேஷ் கிருஷ்ணன் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர்.