பெருமாநல்லுார் நால்ரோட்டில் நிழற்குடை அமைக்கப்படுமா?
பெருமாநல்லுார் நால்ரோட்டில் நிழற்குடை அமைக்கப்படுமா?
ADDED : செப் 20, 2026 05:13 PM
பெருமாநல்லுார், செப். 21–
பெருமாநல்லுார் நால் ரோட்டில் இருந்து திருப்பூர், ஈரோடு, சேலம், கோவை, குன்னத்துார், கோபி உள்ளிட்ட ஊர்களுக்கு ஏராளமானோர் பஸ் ஏறிச் செல்கின்றனர். பஸ் மாறிச் செல்லும் முக்கிய சந்திப்பான இங்கு போதிய நிழற்குடை வசதி இல்லாததால் பயணிகள் சிரமப்படுகின்றனர்.
கோபி ரோட்டில் இருந்த நிழற்குடை, ரோடு விரிவாக்கத்தின்போது அகற்றப்பட்ட நிலையில், இதுவரை மீண்டும் அமைக்கப்படவில்லை.
ஈரோடு, சேலம் மற்றும் திருப்பூர் ரோடுகளிலும் நிழற்குடை வசதி இல்லை. இதனால் பயணிகள் வெயில், மழையில் ரோட்டோரம் நின்று பஸ் ஏறும் நிலை உள்ளது. இடவசதி உள்ள பகுதிகளில் நிழற்குடைகள் அமைத்து பயணிகளின் சிரமத்தை போக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
–––
பெருமாநல்லுார் நால் ரோட்டில் நிழற்குடை இல்லாததால் வெயிலில் பயணிகள் காத்திருக்க வேண்டியுள்ளது.
