/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு மாணவர் விடுதிக்கு சுற்றுச்சுவர் கட்டப்படுமா?
/
அரசு மாணவர் விடுதிக்கு சுற்றுச்சுவர் கட்டப்படுமா?
ADDED : பிப் 03, 2024 03:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊதியூர்: காங்கேயம் அருகே ஊதியூரில், குண்டடம் ரோட்டில் தாயம்பாளையம் அருகே அண்ணாநகரில், பிற்படுத்தப்பட்டோர் அரசு மாணவர் விடுதி உள்ளது. இங்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் தங்கி, தாயம்பாளையம் மற்றும் குண்டடம் பள்ளியில் படிக்கின்றனர்.
கடந்த, 2001-02ல் அப்போதைய காங்கயம் எம்.எல்.ஏ., செல்வி முருகேசன் தொகுதி மேம்பாட்டு நிதியில், விடுதி கட்டப்பட்டது. 23 வருடமாகியும் இதுவரை சுற்றுச்சுவர் கட்டப்படவில்லை. இதனால் இரவில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விடுதியை ஆய்வு செய்து, காம்பவுண்ட் சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க, மக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

