/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரவுடிகள் மீது பாயுமா நடவடிக்கை? அனைத்து கட்சியினர் வலியுறுத்தல்
/
ரவுடிகள் மீது பாயுமா நடவடிக்கை? அனைத்து கட்சியினர் வலியுறுத்தல்
ரவுடிகள் மீது பாயுமா நடவடிக்கை? அனைத்து கட்சியினர் வலியுறுத்தல்
ரவுடிகள் மீது பாயுமா நடவடிக்கை? அனைத்து கட்சியினர் வலியுறுத்தல்
ADDED : மார் 29, 2025 06:36 AM

திருப்பூர் : போதை பொருள் பயன்பாடு, குற்ற செயல்களை தடுக்க கோரி, அனைத்து கட்சி சார்பில், திருப்பூர், முருகம்பாளையத்தில் நேற்று தெருமுனை பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. மா.கம்யூ., ஒன்றிய குழு உறுப்பினர் கருப்பசாமி தலைமைவகித்தார்.
இ.கம்யூ., மண்டல செயலாளர் வடிவேல், மா.கம்யூ., மாவட்ட குழு உறுப்பினர் லட்சுமி, ஒன்றிய செயலாளர் மணிகண்டன், மா.கம்யூ., மாவட்ட செயலாளர் மூர்த்தி மற்றும் த.வெ.க., - வி.சி.க., நிர்வாகிகள் பங்கேற்று, போதை பொருள் பயன்பாட்டை தடுக்க வலியுறுத்தி பேசினர். திருப்பூர் மாநகராட்சி, 41வது வார்டு, முருகம்பாளையம் பகுதியில் அதிகரித்து வரும் கஞ்சா, போதை மாத்திரை, போதை ஊசி, அரிசி கடத்தல் உள்ளிட்ட குற்ற செயல்களை தடுக்க வேண்டும்.
குற்ற செயல்களில் ஈடுபட்டு, வன்முறை கும்பலாக செயல்படும் ரவுடிகள் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுத்து, தண்டனை பெற்றுத்தர வேண்டும்.
முருகம்பாளையத்தில் போலீஸ் ஸ்டேஷன் அமைக்கவேண்டும். 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, அச்சத்தை போக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.