ADDED : மார் 25, 2026 09:47 PM
அ நிறம் | அளவு
உடுமலை: உடுமலை புது பஸ் ஸ்டாண்டில், போதிய இருக்கைகள் இல்லாததால், பயணியர் தவித்து வருகின்றனர்.
உடுமலை பஸ் ஸ்டாண்ட் அருகே புது பஸ் ஸ்டாண்ட் செயல்பட்டு வருகிறது. இங்கு பழநி நோக்கி செல்லும், புறநகர் பஸ்கள், கிழக்கு பகுதி கிராமங்களான மடத்துக்குளம், குமரலிங்கம், கணியூர் பகுதிகளுக்கு செல்லும் டவுன்பஸ்கள் இயக்கப்படுகின்றன. இங்கு தினமும் நுாற்றுக்கணக்கான பயணியர் பல்வேறு ஊர்களுக்கு செல்ல வருகின்றனர். ஆனால் அவர்கள் அமர போதிய இருக்கைகள் இல்லை. இதனால், அவர்கள் நீண்ட நேரம் பஸ்சுக்காக வெயிலில் நின்று காத்திருக்க வேண்டியதுள்ளது.
எனவே, பயணியர் நலன் கருதி, அங்கு கூடுதல் இருக்கைகள் அமைக்க, நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
