/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பழநிக்கு கூடுதல் சிறப்பு பஸ்கள் தைப்பூசத்துக்காக இயக்கப்படுமா?
/
பழநிக்கு கூடுதல் சிறப்பு பஸ்கள் தைப்பூசத்துக்காக இயக்கப்படுமா?
பழநிக்கு கூடுதல் சிறப்பு பஸ்கள் தைப்பூசத்துக்காக இயக்கப்படுமா?
பழநிக்கு கூடுதல் சிறப்பு பஸ்கள் தைப்பூசத்துக்காக இயக்கப்படுமா?
ADDED : பிப் 06, 2025 10:56 PM
திருப்பூர்; தைப்பூச தேர்த்திருவிழாவுக்கு சென்று வர வசதியாக திருப்பூரில் இருந்து பழநிக்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்,' என, பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
திருப்பூரில் இருந்து கொடுவாய், தாராபுரம் வழியாக பழநிக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதிகாலை, 4:50 முதல் இரவு, 10:35 மணி வரை மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து பழநிக்கு, 15 நிமிடத்துக்கு ஒரு பஸ் இயக்கப்படுகிறது. இருப்பினும், விசேஷம், பண்டிகை காலங்களில் பஸ்களின் இயக்கம் போதுமானதாக இல்லை. இரண்டு மணி நேரம் பயணிகள் இருக்கை இல்லாமல் நின்றபடியே பயணிக்க வேண்டிய நிலையே உள்ளது.
பக்தர்கள் கூறியதாவது:
செவ்வாய், ஞாயிறு, சஷ்டி விசேஷ தினங்களில், பழநிக்கு திருப்பூரில் இருந்து, 2 ஆயிரம் பேர் வரை பயணிக்கின்றனர். காலை, 6:00 முதல் 9:00 மணி வரை பழநிக்கு பஸ் எண்ணிக்கை குறைவாக உள்ளது.
இதனால், ஒரே பஸ்சில், 100 பேர் ஏற முட்டி மோத வேண்டியுள்ளது. அடுத்த பஸ் வருவதற்குள் மேலும் கூட்டம் அதிகமாகி விடுகிறது. வழக்கமான தினங்களில் கூட்டம் அதிகமாகி வரும் நிலையில், வரும், 11ம் தேதி தைப்பூசம் என்பதால், பழநியில் ஒரு வாரம் விசேஷம் நடைபெறும். எனவே, 9, 10, 11 மற்றும், 12 ஆகிய தேதிகளில், திருப்பூரில் இருந்து பழநிக்கு கூடுதல் சிறப்பு பஸ்களை இயக்க வேண்டும்.